அனுஷ்கா நடிக்கும் ‘காட்டி’ படத்தின் பிரீ லுக் போஸ்டர் வெளியீடு!

அனுஷ்கா ஷெட்டி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கும் படம் ‘காட்டி.’ இந்த படத்தின் பிரீ லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. போஸ்டரில் புடவை அணிந்தபடி தனது முகத்தை மூடியபடி கம்பீரமாக நடப்பது போல காட்சியளிக்கிறார் அனுஷ்கா.

பரபர காட்சிகள் நிறைந்த பழிவாங்கும் கதையம்சம் கொண்ட படமாக காட்டி உருவாகி வருகிறது. ஒரு அப்பாவி குற்றவாளியாக மாறி லெஜண்ட் அவதாரம் எடுப்பதே இந்த படத்தின் கதை.

வம்சி மற்றும் ராஜீவ் ரெட்டி இணைந்து யு.வி. கிரியேஷன்ஸ் மற்றும் ஃபர்ஸ்ட் ஃபிரேம் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனங்கள் சார்பாக தயாரிக்கும் இந்த படத்தை ஸ்ரீனிவாஸ் ராவ், கிரிஷ் ஜாகர்லமுடி மற்றும் புர்ரா சாய் மாதவ் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்.

படம் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் தெரியவரும்.

படக் குழு:
இயக்குநர்: கிரிஷ் ஜாகர்லமுடி
தயாரிப்பாளர்கள்: வம்சி, ராஜீவ் ரெட்டி
நிறுவனம்: யு.வி. கிரியேஷன்ஸ், ஃபர்ஸ்ட் பிரேம் என்டர்டெயின்மெண்ட்ஸ்
எழுத்தாளர்கள்: சிந்தாகிண்டி ஸ்ரீனிவாஸ் ராவ், கிரிஷ் ஜாகர்லமுடி மற்றும் புர்ரா சாய் மாதவ்
பி.ஆர்.ஓ: சதீஷ்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here