நானி நடிக்கும் 30-வது படம்‘hi நான்னா.’ பறக்கும் முத்தத்தோடு வெளியானது வண்ணமயமான முதல் பார்வை!

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி, மிருணாள் தாக்கூர் நடிக்கும் புதிய படத்திற்கு ‘hi நான்னா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

நானியின் 30-வது படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் பான் இந்திய படைப்பாக உருவாகிறது. இந்தியில் ‘hi பப்பா’ என்ற பெயரில் உருவாகிறது.

இந்த படத்தின் முதல் பார்வை இன்று வெளியானது. தொடர்ந்து வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் நானி இப்போதும் அப்படியான கதையையே தேர்ந்தெடுத்துள்ளார் என்பது முதல் பார்வை மூலம் உறுதியாகிறது.

‘தந்தை – மகள் உறவை மையமாகக் கொண்ட நேர்மறையான, குடும்பப் படமாக இருக்கும். இயக்குநராக அறிமுகமாகும் ஷௌர்யுவ் அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்துவார்’ என்கிறார்கள் படக்குழுவினர்.

முதல் பார்வை போஸ்டரில் நானியின் தோள்களில் அமர்ந்திருக்கும் குழந்தை அவர்களுக்குப் பின்னால் நிற்கும் மிருணாளுக்கு பறக்கும் முத்தம் கொடுக்கிறது. வண்ணமயமாக முதல் பார்வை போஸ்டரில் இப்படியான அம்சங்கள் பார்ப்போரை கவரும் வகையில் அமைந்துள்ளது. படம் வரும் டிசம்பர் 21 அன்று திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

உருவாக்கத்தில் உறுதுணை:-
தயாரிப்பு: ‘வைரா என்டர்டெயின்மென்ட்ஸ்’ மோகன் செருக்கூரி (சிவிஎம்) மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா
தயாரிப்பு வடிவமைப்பு: அவினாஷ் கொல்லா
ஒளிப்பதிவு: சானு ஜான் வர்கீஸ்
இசை: ஹேஷாம் அப்துல் வஹாப்
படத்தொகுப்பு: பிரவீன் அந்தோணி
நிர்வாகத் தயாரிப்பாளர் – சதீஷ் ஈ.வி.வி
ஆடை வடிவமைப்பாளர்: ஷீத்தல் ஷர்மா
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here