இந்தியாவின் முதல் தபால் மனிதனின் கதையை சொல்லும் படம் ‘ஹர்காரா.’
‘வி 1 மர்டர் கேஸ்’ படம் மூலம் நாயகனாக அறிமுகமான ராம் அருண் காஸ்ட்ரோ இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். படத்தின் நாயகனாகவும் நடிக்கிறார். மற்றொரு நாயகனாக காளி வெங்கட் நடித்துள்ளார்.
நாயகியாக கௌதமி நடிக்க, பிச்சைக்காரன் மூர்த்தி,ஜெயப்பிரகாஷ், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
முழுக்க முழுக்க தேனி அருகில் மலைக் கிராமங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியான ஃபர்ஸ்ட் லுக் படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. அதையடுத்து படத்தின் டிரெய்லரை, புதுமையான முறையில், தமிழ்நாட்டின் பல அஞ்சல் அலுவலர்கள் தங்கள் சமூகவலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளனர்.
வில்லுப்பாட்டு கதை மூலம் ஆரம்பிக்கும் டிரெய்லர், காளி வெங்கட் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தி அவர் வழியே முதல் இந்திய தபால் மனிதனின் கதையாக விரிகிறது. மிகப்புதுமையான முறையில் உருவாக்கப்பட்டிருக்கும் டிரெய்லரே ஒரு திரைக்கதை வடிவில் இருப்பது, சினிமா ஆர்வலர்களிடையே பாராட்டுக்களை குவித்து வருகிறது. படம் ரசிகர்களுக்கு ஒரு புதுமையான அனுபவம் கிடைக்கும் என்பதை டிரெய்லர் உறுதி செய்கிறது.
இந்தியாவின் முதல் தபால் மனிதனின் கதை சொல்லும் இந்த படம், இப்போதைய நகர வாழ்வியலின் சிக்கல்களையும், தொழில்நுட்பம் புகாத மலைக் கிராமத்தின் அழகிய வாழ்வியலையும், நாம் மறந்து போன இயற்கையோடு இணைந்த வாழ்க்கையையும் எடுத்துக் காட்டும் விதத்தில் உருவாகியுள்ளது.
படம் ஆக்சன் அதிரடி திரில்லர் என எதுவுமில்லாமல் நம்மை, நாம் வாழ்ந்த வாழ்க்கைக்குள் இழுத்து செல்லும் விதத்தில், மனதை லேசாக்கும் படைப்பாக காமெடி, காதல் என அனைத்தும் நிறைந்த அம்சங்களுடன் உருவாகியுள்ளது.
படத்தினை, தமிழ்த் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ வெளியிடுகிறது. படம் ஆகஸ்ட் 25-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
உருவாக்கத்தில் உறுதுணை:-
ஒளிப்பதிவு: பிலிப் ஆர். சுந்தர், லோகேஷ் இளங்கோவன்
இசை: ராம் சங்கர்
எடிட்டர் : டானி சார்லஸ்
கலை இயக்குநர்: வி ஆர் கே ரமேஷ்
தயாரிப்பு நிறுவனம் : KALORFUL BETA MOVEMENT
தயாரிப்பாளர்: என் ஏ ராமு, சரவணன் பொன்ராஜ்
இணை தயாரிப்பாளர்: அரவிந்த் தர்மராஜ், தீனா