திருநங்கை கும்பலில் சேரும் ஹீரோ… பரபரப்பான கதையோட்டத்தில் உருவான ‘ஹட்டி’ படத்தின் டிரெய்லரை வெளியிட்ட ZEE 5.

இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான  ZEE5, மிகவும் எதிர்பார்க்கப்படும் நேரடி டிஜிட்டல் திரைப்படமான ‘ஹட்டி’ படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது.

நவாசுதீன் சித்திக் மற்றும் அனுராக் காஷ்யப் முதன்மை வேடங்களில் நடித்துள்ள இப்படத்தில் இலா அருண், முகமது ஜீஷன் அய்யூப், சவுரப் சச்தேவா, ஸ்ரீதர் துபே, ராஜேஷ் குமார், விபின் சர்மா மற்றும் சஹர்ஷ் சுக்லா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த பரபரப்பான பழிவாங்கல் டிராமா திரைப்படத்தை, அறிமுக இயக்குநர் அக்ஷத் அஜய் சர்மா இயக்கியுள்ளார். Zee Studios, சஞ்சய் சாஹா மற்றும் Anandita Studios ராதிகா நந்தா தயாரிப்பில், பெரும் பட்ஜெட்டில் உருவாகியுள்ள பரபரப்பான ரிவென்ஜ் டிராமா திரைப்படம் செப்டம்பர் 7, 2023 அன்று ZEE5-ல் திரையிடப்படவுள்ளது.

என்சிஆர், குர்கான் மற்றும் நொய்டாவில் தற்கால பின்னணியில் நடக்கும் கதையாக   அமைக்கப்பட்டுள்ளது இப்படம். குற்றப்பின்னணி கொண்ட திருநங்கை கும்பலில் சேர அலகாபாத்திலிருந்து டெல்லிக்கு வரும் நவாசுதீன் சித்திக், அந்த கும்பலில் சேர்ந்து, வளர்கிறான். தன் குடும்பத்தை அழித்த அனுராக் காஷ்யப்பை தேடி பழிவாங்குவதே அவன் நோக்கம். புதுமையான களத்தில் அழுத்தமான பழிவாங்கும் கதையாக உருவாகியுள்ளது இந்த ஹட்டி திரைப்படம். அக்ஷத் அஜய் ஷர்மா மற்றும் ஆதம்யா பல்லா இணைந்து எழுதியுள்ள, ‘ஹட்டி’ தலைநகரம் முழுவதும் செயல்படும் அழுத்தமான குற்றப்பின்னணியை,  குற்றவாளிகளின் உலகை அழுத்தமாகக் காட்சிப்படுத்தியுள்ளது.

இத்திரைப்படத்திலிருந்து இதுவரை நாம் பார்த்திராத நவாசுதீன் சித்திக்கின் திருநங்கை அவதாரத்தைத் தயாரிப்பாளர்கள் வெளிப்படுத்தியதிலிருந்தே, ரசிகர்களிடம் உற்சாகமும் எதிர்பார்ப்பும் அதிக அளவில் உள்ளது. இந்த அடையாளம் காண முடியாத அவதாரத்தில் நவாசுதீனைப் பார்த்த ரசிகர்கள் அவர்தானா என நம்ப முடியாத நிலையில் ஆச்சரியத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here