வரிசையாய் ரிலீஸாக காத்திருக்கும் படங்களின் டீசர், டிரெய்லருக்கு குவியும் வரவேற்பு… உற்சாகத்தில் நடிகை ஹன்ஸிகா!

ஹன்சிகா நடிப்பில் உருவான ‘மை நேம் இஸ் ஸ்ருதி’ தெலுங்குப் படத்தின் டிரெய்லர் வெளியாகி இணையத்தில் புயலைக் கிளப்ப, ‘கார்டியன்’ தமிழ்ப் படத்தின் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது. படங்கள் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

தமிழ், தெலுங்குப் படங்களில் அசத்திவரும் ஹன்ஸிகா நடித்து சமீபத்தில் வெளியான ‘மை 3′ வெப் சீரிஸும் பெரியளவில் பார்வையாளர்ளின் வரவேற்பை பெற்றது. அதன் மூலம் ஓடிடி தளத்திலும் அழுத்தமான முத்திரை படைத்திருக்கிறார். அப்படியான வரவேற்பாலும் வெற்றிகளாலும் இந்திய சினிமாவுலகில் ஹன்சிகாவின் நட்சத்திர பலம் தொடர்ந்து பிரகாசமாக நீடிக்கிறக்து என்பதை உணரமுடிகிறது.

இதுவரை 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள தனது சமீபத்திய படங்களுக்கு கிடைத்த வரவேற்பு குறித்து பேசியபோது, ‘‘ரசிகர்களிடமிருந்து பெற்ற அன்பாலும் ஆதரவாலும் உற்சாகமாகியிருக்கிறேன். ‘மை நேம் இஸ் ஸ்ருதி’, ‘கார்டியன்’ படங்கள் என் நடிப்புப் பயணத்தில் சிறப்பு வாய்ந்தவை’ என்றார்.

ஹன்ஸிகா மேற்குறிப்பிட்ட இரண்டு படங்கள் தவிர, தெலுங்கில் ‘105 நிமிடங்கள்’, தமிழில் ‘மேன்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். அந்த படங்கள் அடுத்தாண்டு வெளிவர காத்திருக்கின்றன. அந்த வகையில் பார்த்தால் 2024 ஹன்ஸிகாவின் ஆண்டாக இருக்கப் போவது உறுதியாகிறது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here