இயக்குநர் என்னை இந்த படத்தில் கமர்ஷியல் ஹீரோவாக காட்டியிருப்பது மகிழ்ச்சி! -‘ரெய்டு’ பட நாயகன் விக்ரம் பிரபு

விக்ரம் பிரபு நடிக்க, ஆக்சன் திரில்லர் சப்ஜெக்டில் கார்த்தி இயக்கியிருக்கும் படம் ‘ரெய்டு.’

இயக்குநர் முத்தையா வசனம் எழுதியுள்ள இந்த படத்தில் ஸ்ரீதிவ்யா நாயகியாக நடித்திருக்கிறார். அனந்திகா, ரிஷி ரித்விக், சௌந்தரராஜா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 10-ம் தேதி திரையரங்குகளுக்கு வரவிருக்கிறது.

இந்த நிலையில் இயக்குநர் கார்த்தி, ‘‘ ‘ரெய்டு’ சமூக பிரச்சனையுடன் கூடிய, குடும்ப பொழுதுபோக்கு படமாக இருக்கும். இந்த படத்தின் திரைக்கதையை தான் எழுதும்போது, கதாநாயகனின் கதாபாத்திரம் பக்கத்து வீட்டு பையன் போலவும் வேண்டும் அதே சமயம், மாஸ் ஹீரோவாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்கேற்ப விக்ரம் பிரபு இருந்தார்” என்றார்.

நடிகர் விக்ரம் பிரபு, ‘‘இயக்குநர் கார்த்தி படத்தின் கதை குறித்து சொன்னபோது அதில் ஆக்‌ஷன், எமோஷன், காதல், நடனம் மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இருப்பதை உணர்ந்தேன். அவர் என்னை கமர்ஷியல் ஹீரோவாக காட்டியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

நடிகை ஸ்ரீ திவ்யா, ‘‘நடிகையாக எனக்கு சிறந்த அடையாளத்தைக் கொடுத்த தமிழ் சினிமாவில் மீண்டும் கம்பேக் கொடுப்பதில் மகிழ்ச்சி” என்றார்.

படத்தை தயாரித்துள்ள எம் ஸ்டுடியோஸ், ஓபன்ஸ்கிரீன் பிக்சர்ஸ், ஜி பிக்சர்ஸ் நிறுவனத்தினர், ‘‘ ‘ரெய்டு’ படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது மகிழ்ச்சி தருகிறது” என்று தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here