நடிகர் ஹரீஷ் கல்யாணின் 15-வது படத்திற்கு தற்காலிகமாக HK15 என பெயரிடப்பட்டு தமிழ்ப் புத்தாண்டையொட்டி டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இரத்தம் தெறிக்க ஹரீஷ் கல்யாணின் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் அந்த போஸ்டர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.
வித்தியாசமான களங்களில் தனித்துவமான கதாப்பத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஹரீஷ் கல்யாண், லப்பர் பந்து படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஆக்சன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார்.
வடசென்னை வாழ் இளைஞர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி ஹைப்பர் கான்செப்டில், வித்தியாசமான ஆக்சன் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. லிஃப்ட் படம் மூலம் கவனம் ஈர்த்த, இயக்குநர் வினீத் வரபிரசாத் இப்படத்தை இயக்கியுள்ளார்.
படப்பிடிப்பு, சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு, இன்னும் சில தினங்களில் முழுமையாக முடிவடையவுள்ளது. விரைவில் இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் துவங்கவுள்ளது.
படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில்…