ஒரு பையனுக்கு அனுமனின் சக்தி கிடைக்கிற கற்பனைதான் இந்த படத்தின் கதை! -‘ஹனு மான்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படநாயகன் தேஜா சஜ்ஜா பேச்சு

தேஜா சஜ்ஜா நடிப்பில், பிரமாண்ட பான் இந்தியப் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ஹனு – மான்.’

இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் திரைப்பட யுனிவர்ஸின் முதல் படமாக உருவாகும் இந்த படத்தின் கதை அடிப்படையில் ‘அஞ்சனாத்ரி’ என்ற கற்பனை இடத்தில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. முழுக்க சிஜியில் உலகத்தரத்தில் இந்த ஃபேண்ட்ஸி உலகம் உருவாக்கப்பட்டுள்ளது.

படத்தில் தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் நடிக்க, வினய் ராய் வில்லனாகவும், வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர்.

இப்படம் பொங்கல் கொண்டாட்டமாக ஜனவரி 12, 2024 அன்று தெலுங்கு, இந்தி, மராத்தி, தமிழ், கன்னடம், மலையாளம், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம், ஜப்பானியம் உள்ளிட்ட பல மொழிகளில் பான் வேர்ல்ட் படமாக திரைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில், படத்தினை விளம்பரப்படுத்தும் பணியில் படக்குழுவினர் பம்பரமாகச் சுழன்று வருகின்றனர். அந்த வகையில் இப்படத்தின் தமிழ்ப் பதிப்பினை, விளம்பரப்படுத்தும் வகையில், படக்குழுவினர் சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

நிகழ்வில் தேஜா சஜ்ஜா, ‘‘ஒரு பையனுக்கு அனுமனின் சக்தி கிடைக்கிற கற்பனைதான் இந்த படத்தின் கதை. இது நேரடித்தமிழ் படம் மாதிரிதான் இருக்கும். அதற்காக நிறைய உழைத்துள்ளோம். டிரெய்லரிலேயே படத்தின் தன்மை உங்களுக்குத் தெரியும். படம் கண்டிப்பாக உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும். நம் தென்னிந்தியக் கலாச்சாரத்தில், பொங்கலுக்கு 4, 5 படங்கள் பார்க்கும் வழக்கம் இருக்கிறது, அது போல் இந்தப் பொங்கலுக்கு எங்கள் படத்திற்கு ஆதரவு தாருங்கள்.

இது ஓடிடியில் பார்க்கும் படமல்ல திரையரங்கில் அனுபவிக்க வேண்டிய படம். டிரெய்லருக்கு நல்ல வரவேற்பு தந்தீர்கள் படத்திற்கும் ஆதரவு தாருங்கள். நன்றி” என்றார்.

நடிகை வரலட்சுமி, ‘‘இந்தப்படம் இந்தியாவின் முதல் சூப்பர் ஹீரோ படமாக இருக்கும். புதுசாக இருக்கும். டிரெய்லர் பார்த்திருப்பீர்கள், ஆனால் படம் இன்னும் நிறைய ஆச்சரியம் தரும். சில படங்களின் விஷுவலை திரையரங்கில் பார்த்தால் தான் அனுபவிக்க முடியும் இது அப்படியான படைப்பு” என்றார்.

நடிகர் வினய், ‘‘நான் நடிக்கும் முதல் தெலுங்குப் படம் இது. வித்தியாசமான காஸ்ட்யூமில் வித்தியாசமான பாத்திரத்தில் நடித்துள்ளேன். சின்ன படமாக தான் ஆரம்பித்தது. ஆனால் ஹனுமனின் ஆசீர்வாதத்தில் பான் இந்திய அளவில் மிகப்பெரிய படமாக மாறியுள்ளது. படத்தில் நிறைய சர்ப்ரைஸ் இருக்கிறது” என்றார்.

நடிகை அம்ரிதா ஐயர், ‘‘இந்த படம் இந்திய சினிமா பெருமைப்படும் படமாக, ரசிகர்கள் தியேட்டரில் கொண்டாடும் படமாக இருக்கும். இது ஆன்மிக படமல்ல. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிப்பார்கள்” என்றார்.

தயாரிப்பாளர் சைத்தன்யா, ‘‘ஹனு மான் ஒரு சிறு முயற்சியாக துவங்கி பான் வேர்ல்ட் படமாக மாறியுள்ளது. உங்கள் எல்லோருக்கும் படம் புது அனுபவமாக இருக்கும்” என்றார்.

படத்தை வெளியிடுகிற சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன், ‘‘உலகத்தரத்தில் இப்படைப்பினை உருவாக்கியுள்ளனர். புது வருடத்தில் என் பணியை இந்த படத்துடன் ஆரம்பிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. பொங்கலை ஹனுமானுடன் ரசிகர்கள் கொண்டாடலாம்” என்றார்.

படக்குழு:-

படத்தை பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் கே நிரஞ்சன் ரெட்டி தயாரிக்கிறார். அஸ்ரின் ரெட்டி நிர்வாக தயாரிப்பாளராகவும், வெங்கட் குமார் ஜெட்டி லைன் தயாரிப்பாளராகவும், குஷால் ரெட்டி இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.

ஸ்ரீநாகேந்திரா தாங்கலா தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார். ஸ்ரீமதி சைத்தன்யா வழங்குகிறார்.

சிவேந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார். இளம் திறமையாளர்களான கவுரஹரி, அனுதீப் தேவ், கிருஷ்ணா சவுரப் ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here