வரவேற்பில் பரபரப்பை உருவாக்கி வசூலில் சாதனை செய்த ‘ஹாட் ஸ்பாட்’ மே 17 முதல், பிரைம் வீடியோ & ஆஹா ஓடிடி தளங்களில் ரிலீஸ்!

விக்னேஷ் கார்த்திக் இயக்கி, சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பி, ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பைக் குவித்த ‘ஹாட் ஸ்பாட்’ திரைப்படம், வரும் மே 17 முதல், அமேசான் ப்ரைம் மற்றும் ஆஹா ஓடிடி தளங்களில், ஸ்ட்ரீமாகவுள்ளது.

கே ஜே பி டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் சார்பில் கே ஜே பாலமணி மார்பன் மற்றும் சுரேஷ்குமார் இணைந்து தயாரிக்க, இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், சிக்ஸர் எண்டர்டெயின்மெண்ட் சார்பில், தினேஷ் கண்ணன் வெளியிட, ஆண் பெண் உறவின் பேசாத பக்கங்களைப் பேசிய ஹாட் ஸ்பாட் திரைப்படம் கடந்த மார்ச் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

கலையரசன், 96 பட ஆதித்யா பாஸ்கர், மற்றும் கௌரி கிஷன், சாண்டி மாஸ்டர், அம்மு அபிராமி, ஜனனி ஐயர், திட்டம் இரண்டு பட ஹீரோ சுபாஷ், சோபியா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டிரெய்லர் வெளியான நொடியிலேயே பெரும் விமர்சனங்களைக் குவித்தது. படம் வெளியான பிறகு படத்தின் நெகட்டிவிடி மொத்தமும் பாஸிடிவிடியாக மாறியது. ரசிகர்கள் மட்டுமல்லாது விமர்சகர்களும் இப்படத்தை கொண்டாடினார்கள். சமூகம் பேசத் தயங்கும் பல விசயங்களை, மிகத் தைரியமாக, மிகத் தெளிவாக கையாண்ட விதத்தில், இப்படம் பரவலான பாராட்டுக்களைப் பெற்றது.

தற்போதைய திரையரங்கு சூழ்நிலையில் இப்படம் திரையங்குகளில் முழுதாக 5 வாரங்களைக் கடந்து சாதனை படைத்தது. அதையடுத்து கோடை விடுமுறையை கொண்டாடும் விதமாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here