படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காக யாரிடமும் இரக்கம் காட்டாமல் கடுமையாக வேலை வாங்கினேன்! -‘இராவண கோட்டம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் பேச்சு

ஷாந்தனு – கயல் ஆனந்தி நடிப்பில், ‘மதயானைக் கூட்டம்’ படத்தை இயக்கி கவனம் ஈர்த்த விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘இராவண கோட்டம்.’

இந்த படம் மே 12-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதையொட்டி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.

இந்த நிகழ்வில் இயக்குநர் விக்ரம் சுகுமாரன், ”நான் ஒரு பிடிவாதமான இயக்குநர். படம் நன்றாக வருவதற்காக எல்லோரையும் கடுமையாக வேலை வாங்கினேன். அடுத்தடுத்த படங்களிலும் அப்படியேதான் இருப்பேன்.
இந்த படம் மிகப்பெரிய நெருக்கடியில் தான் உருவானது. நடிகர் ஷாந்தனு, மிகப்பெரும் பாரத்தைத் தலையில் ஏற்றிக் கொண்டார். அவருக்கு இந்தப் படம் பெயர்ச் சொல்லும் படைப்பாக இருக்கும். கண்டிப்பாக படம் மிகப்பெரிய வெற்றியடையும்” என்றார்.நடிகர் ஷாந்தனு, ”இப்படத்தின் தயாரிப்பாளர் கண்ணன் என் தந்தை எனக்கு என்ன செய்ய வேண்டும் நினைப்பாரோ அதே போல் நான் முன்னேறத் தேவையான அனைத்தையும் செய்தார். அவருக்கு மிகப்பெரும் நன்றி. இந்த படம் சக்கரக்கட்டி படத்திற்குப் பிறகு மக்களிடம் அதிகம் எதிர்பார்க்கப்படுகிற படமாக இருப்பது மிக மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் படத்தில் நடிகரைத் தாண்டி, தயாரிப்பு பணிகளும் நான் பார்க்க வேண்டி இருந்தது, தயாரிப்பு மிகக் கடினமான வேலை மிகவும் சிரமப்பட்டேன்.

படக்குழுவிற்கு நிறைய அனுபவம் இருந்தது. அனைவரும் பல நாட்கள் தூங்காமல் வேலை செய்தனர். அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி. இந்த நான்கு வருடங்கள் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். படம் பார்த்த பிறகு எனக்கு மிகவும் திருப்திகரமாக இருந்தது. கிராமத்துப் பையனாக நடிக்கப் போகிறோம் என்று மகிழ்ச்சியாக இருந்தேன். ஆனால், அது அவ்வளவு எளிதல்ல, காலில் இரத்தம் வர நடித்தேன். எந்த படத்திலும் நான் இதைச் செய்ததில்லை, நான் மட்டும் இல்லை அனைவரும் இது போல கஷ்டப்பட்டு தான் நடித்தனர். படத்தில் தென் மாவட்டத்தில் உள்ள அரசியலைப் பற்றிப் பேசியுள்ளனர். இது ஒரு தரமான படைப்பாக இருக்கும். அனைவரும் எங்கள் உழைப்பிற்கு ஆதரவு தர வேண்டும்” என்றார்.நடிகை கயல் ஆனந்தி, ”மூன்று வருட தடைகளைத் தாண்டி இந்த படம் இப்போது வெளியாகத் தயாராகியுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. விக்ரம் சுகுமாரன் சார் சினிமாவை மிகவும் ரசித்து வேலை செய்பவர். அவருடன் வேலை செய்தது மிகவும் மகிழ்ச்சியாக, நல்ல அனுபவமாக உள்ளது. ஷாந்தனுவுடன் இணைந்து நடித்தது மிகவும் சுலபமாக இருந்தது. இந்தப் படம் ராம்நாடு மக்களின் வாழ்க்கை பற்றிப் பேசுவதாக இருக்கும்” என்றார்.நடிகர் இளவரசு, ”இந்த படத்தில் தென் மாவட்டத்தில் உள்ள அரசியலைப் பற்றிப் பேசியுள்ளனர். படம் பார்த்த பிறகு உங்களுக்கு தெரியும். தென் பகுதிகளில் பல கஷ்டங்கள் உள்ளது. தண்ணீர் மிகப் பெரிய பிரச்சனையாக உள்ளது. அதற்கான காரணங்களையும் இந்த படத்தில் பேசியுள்ளனர். இயக்குநரை எனக்குப் பல வருடங்கள் முன்பே தெரியும். ஒரு படத்தின் வேலைக்காக மதுரைக்கு அருகில் ஒரு ஊருக்குச் சென்றேன். அப்போது ஒரு நாள் ஒருவர் வீட்டிற்குச் சென்று தண்ணீர் குடித்தேன் அது அவரது வீடுதான். பல நாட்கள் கழித்து அதை என்னிடம் சொன்னார் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

ஷாந்தனு வெற்றிக்காகப் போராடிக் கொண்டிருக்கும் ஒரு இளைஞன் கண்டிப்பாக இந்த படம் வெற்றி பெறும். தயாரிப்பாளர் கண்ணன் சாருக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த குழுவினர் உழைப்பை, மக்களிடம் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டும். அனைவருக்கும் நன்றி” என்றார்.

படக் குழுவினர்:
இசை – ஜஸ்டின் பிரபாகரன்
படத்தொகுப்பு – லாரன்ஸ் கிஷோர்
தயாரிப்பு – KRG Group Of Companies கண்ணன் ரவி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here