எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள ஜெயம் ரவி, நயன்தாரா நடித்துள்ள ‘இறைவன்’ ஆகஸ்டில் ரிலீஸ்! விரைவில் டிரெய்லர் வெளியீடு!

ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘இறைவன்.’

ஜெயம் ரவி, நயன்தாராவோடு ராகுல் போஸ், ஆஷிஷ் வித்யார்த்தி, நரேன், சார்லி, வினோத் கிஷன், விஜயலட்சுமி, அழகம் பெருமாள், பக்ஸ் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தை ‘என்றென்றும் புன்னகை’, ‘மனிதன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அகமது இயக்கியுள்ளார்

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு நடிகர் ஜெயம் ரவியின் நட்சத்திர மதிப்பு பான் இந்தியா அளவில் உயர்ந்துள்ளது. நயன்தாராவுக்கு அனைத்து பகுதிகளிலும் பெரும் ரசிகர் பட்டாளம் இருப்பதால், மொழிகள் தாண்டி இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

படப்பிடிப்பு சென்னை மற்றும் பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. தேர்ந்த நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் சரியான திட்டமிடலோடு உழைத்ததன் பலனாக படப்பிடிப்பு நிறைவடைந்து பட வெளியீட்டுக்கு முந்தைய போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. வரும் ஆகஸ்ட் ஆகஸ்ட் 25-ம் தேதி தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய நான்கு இந்திய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

முன்னதாக படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு விரைவில் நடக்கவிருக்கிறது.

படக்குழுவினர்:
தயாரிப்பாளர்: சுதன் சுந்தரம் & ஜெயராம் .ஜி,
எழுதி இயக்கியவர்: ஐ. அகமது,
இசை: யுவன் சங்கர் ராஜா,
ஒளிப்பதிவு: ஹரி.கே.வேதாந்த்,
எடிட்டர்: மணிகண்ட பாலாஜி,
தயாரிப்பு வடிவமைப்பாளர்: ஜாக்கி,
சண்டைப் பயிற்சி: டான் அசோக்,
காஸ்ட்யூம்: அனு வர்தன் (நயன்தாரா), பிரியா கரன் & பிரியா ஹரி,
விளம்பர வடிவமைப்பு: கோபி பிரசன்னா,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா & ரேகா டி’ஒன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here