மாடலிங் துறையை மையப்படுத்தி, புதுமுக ஹீரோக்கள் நடிக்கும் ‘இராக்கதன்.’ வரும் ஜூலை மாதம் ரிலீஸ்!

இராக்கதன்’ என்ற வித்தியாசமான பெயரில் திரைப்படம் உருவாகியுள்ளது. அறிமுக நடிகர்கள் விக்னேஷ் பாஸ்கர், தினேஷ் கலைச்செல்வன் இருவரும் ஹீரோக்களாக நடிக்க வம்சி கிருஷ்ணா, ரியாஸ் கான், நிழல்கள் ரவி, காயத்ரி ரீமா உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்களும் இந்த படத்தில் நடித்துள்ளனர். ‘மருதம் ப்ரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்க தினேஷ் கலைச்செல்வன் இயக்கியுள்ளார்.

பல தடைகளைத் தாண்டி படப்பிடிப்பு நிறைவடைந்து வரும் ஜூலை 21-ம் தேதி தமிழ்நாடு முழுதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

இந்த நிலையில் கடந்த 7.6.2023 அன்று சென்னையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. படக்குழுவினரோடு ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போது படம் பற்றி படக்குழுவினர், ‘தமிழ் திரையுலகில் இதுவரை எவரும் தொடாத மாடலிங் துறையை கதைக்களமாக்கி உருவாகியுள்ள படம் இது. இன்றைய சமுதாயத்தில் பெண்கள் படும் துன்பங்களை மட்டுமே காட்டிய தமிழ் சினிமா உலகத்தில், முதல்முறையாக ஒரு ஆண் தன் குடும்பத்திற்காகவும் கனவுக்காகவும் படும் துன்பங்களை எடுத்துச் சொல்லும் விதத்தில் திரைக்கதை அமைத்துள்ளோம்’ என்றனர்.

உருவாக்கத்தில் உறுதுணை:
தயாரிப்பு – எம் ஏ ஜி பாஸ்கர், ராணி ஹென்ரி சாமுவேல் முதன்மை தயாரிப்பு – தாண்டாயுதபாணி
ஒளிப்பதிவு – மனாஸ் பாபு
படத்தொகுப்பு – கோபி கிருஷ்ணா
இசை – ஏ.பிரவீன் குமார்
பாடல்கள் – இயக்குநர் தினேஷ் கலைச்செல்வன், பாபு கிறிஸ்டியன்
கலை இயக்குநர் – இன்ப பிரகாஷ்
சண்டைப் பயிற்சி – சரவெடி சரவணன்

இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here