உறைய வைக்கும் காட்சிகளோடு ‘இறைவன்’ படத்தின் டிரெய்லர். கெமிஸ்ட்ரியில் அசத்தும் ஜெயம் ரவி – நயன்தாரா!

ஜெயம் ரவி – நயன்தாரா நடிப்பில், அகமது இயக்கியுள்ள படம் ‘இறைவன்.’ ராகுல் போஸ், நரேன், விஜயலட்சுமி, ஆஷிஷ் வித்யார்த்தி, பக்ஸ் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. எந்த கதாபாத்திரமானாலும் பொருந்திப் போகும் ஜெயம் ரவி இந்தப் படத்திலும் சிறப்பாக நடித்துள்ளார் என்பதை டிரெய்லர் எடுத்துச் சொல்கிறது.

2 நிமிடம் 35 விநாடிகள் ஓடக்கூடிய இந்த டிரெய்லர் ஒரு மனநோயாளி கொலையாளியின் (ராகுல் போஸ்) இருண்ட உலகத்தையும், கதாநாயகனின் (ஜெயம் ரவி) வருகையையும் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. நேர்மையும் கோபமும் கொண்ட இளம் காவல் துறை அதிகாரியாக ஜெயம் ரவி வருகிறார். ஆனாலும், எதிர்பாராத அவரது பயணம் எதிராளியை தேடி புதிரான இடத்திற்குள் அழைத்து செல்கிறது.

அகமது இயக்கிய முந்தைய படங்களான ‘மனிதன்’, ‘என்றென்றும் புன்னகை’ ஆகியவற்றிலிருந்து மாறுபட்டு, புதிய ஜானரில் தனது திறமையை நிரூபிக்கும்படி இந்த படத்தை இயக்கியுள்ளார். அதை டிரெய்லரும் உறுதி செய்கிறது. ஜெயம் ரவி – நயன்தாராவின் கெமிஸ்ட்ரி ரசிக்க வைக்கிறது.

படம் வரும் செப்டம்பர் 28-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

படக்குழு:-
தயாரிப்பு : சுதன் சுந்தரம் & ஜெயராம்.ஜி
எழுத்து மற்றும் இயக்கம்: ஐ. அகமது
இசை : யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு: ஹரி.கே.வேதாந்த்
எடிட்டர் : ஜே.வி.மணிகண்ட பாலாஜி
தயாரிப்பு வடிவமைப்பாளர்: ஜாக்கி
நிர்வாக தயாரிப்பாளர்: அருணாசலம்
சண்டைப் பயிற்சி: டான் அசோக்
வசனம்: சச்சின், கார்த்திகேயன் சேதுராஜ்
உடைகள்: அனு வர்தன் (நயன்தாரா),
பிரியா கரண் & பிரியா ஹரி
விளம்பர வடிவமைப்புகள்: கோபி பிரசன்னா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here