விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்ட ‘இந்த கிரைம் தப்பில்ல’ படத்தின் முதல் பார்வை!

‘ஆடுகளம்’ நரேன், சின்னத்திரை பிரபலம் பாண்டி கமல், மேக்னா எலன் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கும் படம் ‘இந்த கிரைம் தப்பில்ல.’ தேவகுமார் இயக்கியிருக்கும் இந்த படத்தில் காமெடி நடிகர்கள் வெங்கல்ராவ், முத்துக்காளை உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர்.
இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டரை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டார்.
இந்த படத்திற்கு பரிமளவாசன் இசையமைத்திருக்கிறார்.  பாடல்களை முன்னணி பாடகர்கள் பிரசன்னா, வேல்முருகன் பாடியிருக்கின்றனர். ஏ.எம்.எம்.கார்த்திகேயன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.படத்தை ‘மதுரியா புரொடக்ஷன்ஸ்’ மனோஜ் கிருஷ்ணசுவாமி தயாரித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here