ஒரு பாதியில் மீசை, மறுபாதியில் தாடி… வசந்த் ரவி நடிக்கும் ‘இந்திரா’ படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக்!

வசந்த ரவி நடிக்க, சபரீஷ் நந்தா முதன் முறையாக இயக்கும் படம் ‘இந்திரா.’

இந்த படத்தின் கதாநாயகியாக மெஹ்ரின் பிரசன்டா நடிக்க, அனிகா சுரேந்திரன், சுனில், கல்யாண் மாஸ்டர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

‘ஜெ.எஸ்.எம். பிக்சர்ஸ்’ சார்பில் ஏ.ஆர்.ஜாபர் சாதிக் மற்றும் ‘எம்பரர் என்டர்டெயின்மென்ட்’ சார்பில் இர்ஃபான் மாலிக் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

நயன்தாரா நடித்த ‘ஐரா’, மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்து பெரும் வரவேற்பை பெற்ற ‘நவரசா’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய சபரீஷ் நந்தா இயக்கும் முதல் படம் இது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here