துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’ படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் இயக்குநர் மிஷ்கின்!

இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், துல்கர் சல்மானின் 40 வது திரைப்படமான ‘ஐ அம் கேம்’ படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். RDX புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்கும் இப்படத்தை, துல்கர் சல்மான் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

திரைக்கதையை சஜீர் பாபா, இஸ்மாயில், அபூபக்கர் மற்றும் பிலால் மொய்தூ ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். வசனங்களை ஆதர்ஷ் சுகுமாரன் மற்றும் ஷஹாபாஸ் ரஷீத் எழுதியுள்ளனர்.

பிசாசு, துப்பறிவாளன், அஞ்சாதே, சித்திரம் பேசுதடி, ஓநாயும் ஆட்டின்குட்டியும், போன்ற பெரும்  பாராட்ட்டுக்களைக் குவித்த  தமிழ்ப் படங்களை இயக்கிய இயக்குநர் மிஷ்கின், சூப்பர் டீலக்ஸ், மாவீரன், லியோ, டிராகன் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர், துல்கர் சல்மான், ஆண்டனி வர்கீஸ் உடன் முதன்முறையாக இணைந்து  ஐ அம் கேம்  படத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

படம் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் தெரியவரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here