இது வரலாற்றில் மனித மாண்பை மீட்டெடுக்கும் மாபெரும் முயற்சி! -மார்கழியில் மக்களிசை ஓசூர் நிகழ்வில் இயக்குநர் பா. இரஞ்சித் பேச்சு

இயக்குநர் பா. இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைத்த ‘மார்கழியில் மக்களிசை’ நிகழ்ச்சி டிசம்பர் 24; 2023 அன்று மாலை ஓசூரில் மத்திகிரி கூட்டு ரோடு மைதானத்தில் உற்சாகமாக நடந்தது.

முனுசாமி பெரிய மேளத்துடன் துவங்கி, சித்தன் ஜெய மூர்த்தி குழுவின் நாட்டுப்புற இசை, ராப் இசை, கானா மற்றும் அறிவு & அம்பாசா ஆகியோரின் அரங்கம் அதிரும் இசையோடு நிகழ்வு களைகட்டியது.

நடிகர் கலையரசன், இயக்குநர் லெனின்பாரதி, இயக்குநர் ஜெய்குமார், தினகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

எழுத்தாளரும் த.மு.எ.ச. பொதுச்செயலாளருமான ஆதவன் தீட்சண்யா சிறப்புரை வழங்கினார்.

நிகழ்வில் பேசிய இயக்குநர் பா. இரஞ்சித், ‘‘இந்த நிகழ்வுக்கு மக்கள் அளித்த ஆதரவு என்னை நெகிழ வைக்கிறது. இது வெறும் கலை நிகழ்ச்சி மட்டுமல்ல; இது வரலாற்றில் மனித மாண்பை மீட்டெடுக்கும் ஒரு மாபெரும் முயற்சி” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here