ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிற படம் இது! -இரவுப் பறவை படத்தின் சிறப்பு காட்சியை பார்த்து கருத்து தெரிவித்த தொல்.திருமாவளவன் 

வேதாஜி பாண்டியன் இயக்கத்தில் உருவான ‘இரவுப் பறவை’ படத்தின் சிறப்புக் காட்சியை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பார்த்து தனது கருத்துகளைப் பகிர்ந்தார்.

”ஈழத் தமிழர்கள் தமிழ்நாட்டில் கால் நூற்றாண்டுக்கு மேலாக முகாம்களில் தங்கி வாழ்ந்து வருகிறார்கள். இன்று மறுவாழ்வு மையம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

இலங்கையில் குடியுரிமை உண்டு என்றாலும் கூட இந்தியாவில் தமிழ்நாட்டில் பல ஆயிரக்கணக்கானோர் பிறந்து வளர்ந்தவர்கள் உள்ளனர். அவர்களைப் பொறுத்தவரை இதுதான் தாயகம். இச்சூழலில் அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வேண்டும் என்று பரவலாக எழுந்துள்ளது. இக்கருத்தை மையமாக வைத்து இயக்குனர் வேதாஜி பாண்டியன் இயக்கி இருக்கிறார். இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

இலங்கையில் இருந்து தப்பித்து தமிழ்நாட்டுக்கு வந்த இளம் பெண் பல்வேறு காரணங்களால் இன்னல்களுக்கு ஆளாகிறார். இங்கேயே திருமணம் செய்து வாழ வேண்டும் என்று விரும்பினால் கூட பல்வேறு சக்திகளால் இன்னல்களுக்கு ஆளாகிறார். இச்சூழலில் அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக முதலமைச்சரை சந்தித்து இம்மண்ணில் வாழ வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறார். இந்திய அரசிற்கு எடுத்துச் சென்று குடியுரிமை வழங்குவதாக மசோதா இயற்றி நிறைவேற்றப்பட்டு அந்தப் பெண்மணிக்கும் இங்கு தங்கி இருக்கும் மக்களுக்கும் குடியுரிமை வழங்கப்படுவதாக சொல்லப்படுகிற கதைக் களமாக கொண்டு நண்பர் வேதாஜி பாண்டியன் படத்தை இயக்கியிருக்கிறார்.

இரட்டை குடியுரிமை பல நாடுகளில் தஞ்சம் புகுந்தவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தியாவில் மட்டும் இஸ்லாமியர் மற்றும் ஈழத் தமிழர்களுக்கும் இல்லை என்று இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆனாலும் கூட திரைப்படத்திற்காக இந்திய பாராளுமன்றத்தில் இரட்டை குடியுரிமை வழங்கியதாக கதையை முடித்திருக்கிறார்.

நம் உறவுகள் தான்,நம் தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டு இருக்கிறார்கள். அவர்களுடைய உணர்வை மதிப்பளித்து கட்டாயம் ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறேன்.”

சத்யா, நந்தினி ,நிழல்கள் ரவி ,சிவா, டாக்டர்.ஆர் பாண்டியன்,இயக்குனர் செல்வகுமாரன் ஆகியோர் கதையின் பாத்திரங்களாக நடித்துள்ளனர்.

ஆர்.பாண்டியன் வழங்க வேதாஜி பாண்டியன் எழுதி இயக்கியிருக்கிறார். பாடல்கள் எழுதி ஆல்வின் கலைபாரதி இசையமைத்திருக்கிறார். எஸ்.பி பகவதி பாலா ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here