இந்த படத்தின் இயக்குநரிடம் உழைப்பும் அர்ப்பணிப்பும் உள்ளது; அவர் ஜெயிக்க வேண்டும்! -‘இனிமே நாங்கதான் ஹெட்லைன்ஸ்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் ஜெய் ஆகாஷ் பேச்சு

சமூகத்தில் பெண்களுக்கு நிகழும் கொடுமைகளை மையப்படுத்தி அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள ‘இனிமே நாங்கதா ஹெட்லைன்ஸ்’ படத்தை சாய் பிரபா மீனா இயக்கியிருக்கிறார்.

இந்த படத்தில் சாய் பிரபா மீனா, ராஜ் மித்ரன், மீசை ராஜேந்திரன், பிர்லா போஸ், ஆஷா, கவிதா, சங்கீதா, கீர்த்தனா உள்ளிட்டோர் நடிக்க கௌரவத் தோற்றத்தில் ஷகீலா நடித்துள்ளார்.

விரைவில் திரைக்கு வரவுள்ள இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

நிகழ்வில் இயக்குநர் சாய் பிரபா மீனா பேசியபோது, ‘‘இந்த இடத்தில் நான் நிற்க காரணம் என் ஆசான் ஜெய் ஆகாஷ் அவர்கள்தான். படத்தில் ஷகிலா மேடம் படபடவென பட்டாசு போல் நடித்து முடித்தார். மீசை ராஜேந்திரன் சார் நன்றாக நடித்து தந்தார். பெண்களுக்கு நடக்கும் பிரச்சனைகளை மையப்படுத்தி, இந்தப் படத்தை எடுத்துள்ளேன். படம் நன்றாக வரவேண்டுமென எல்லோருடனும் சண்டை போட்டுள்ளேன்.

சின்ன படம் பெரிய படம் என எதுவும் இல்லை அதை வைத்து மனிதர்களின் திறமையை எடை போடாதீர்கள். உலகமே கிறுக்கன் என்று சொன்ன எலான் மஸ்க் இன்று உலகையே ஆளுகிறார். அந்த வகையில் என்னை போன்ற இளைஞர்களும் ஜெயிக்க முடியும் என நம்புகிறேன்” என்றார்.

நடிகை ஷகீலா, இயக்குநர் எனக்கு நல்ல வேடம் தந்தார். படத்தில் நான்கு பெண்கள் மேக்கப் இல்லாமல் மிக இயல்பாக நன்றாக நடித்துள்ளார்கள். படம் பெரிய வெற்றி பெறும் எல்லோருக்கும், வாழ்த்துக்கள்” என்றார்.

நடிகர் ஜெய் ஆகாஷ், ‘‘இயக்குநர் சாய் பிரபா என் தம்பி மாதிரி. எனக்காக என்னவேணாலும் செய்வான். அவனுக்கு ஜெயிக்க வேண்டும் என்ற வைராக்கியம் இருக்கிறது. அவன் இயக்குநராக வேண்டும் என்று எடுத்த படம் தான் யோக்கியன். இப்போது அவனே அவன் முயற்சியில் இனிமே நாங்கதான் ஹெட்லைன்ஸ் படத்தை இயக்கியுள்ளான். படம் நன்றாக வந்துள்ளது. அவனிடம் உழைப்பும் அர்ப்பணிப்பும் உள்ளது. அவன் ஜெயிக்க வேண்டும். படத்திலிருக்கும் அனைவரும் என் நண்பர்கள்தான். அனைவருக்கும் வாழ்த்துகள்” என்றார்.

தமிழ்நாடு திரைப்பட சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்கம் ஆர். கே. அன்பு செல்வன், ‘‘இயக்குநர் முதலில் யோக்கியன் என ஒரு படம் எடுத்தார். அது ரிலீஸாகி ஆறு மாதத்திற்குள் அடுத்த படத்தை எடுத்து டிரெய்லர் விழாவிற்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளார் சாய் பிரபா. அவரது திறமைக்கு இந்தப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக வேண்டும்” என்றார்.

நடிகை ஷகீலா, தேசிய ஜனநாயக கட்சி துணைத் தலைவர் ஐ ஜே கே, ஜி பூபதி, நடிகர் பிர்லா போஸ், நடிகர் மீசை ராஜேந்திரன் உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.

படக்குழு:
இயக்கம் – சாய் பிரபா மீனா
ஒளிப்பதிவு – பால்பாண்டி
இசை – சந்தோஷ் ராம்
எடிட்டிங் – நவீன் குமார்
சண்டை பயிற்சி – சூப்பர் குட் ஜீவா
ஆர்ட் டைரக்டர் – கிரண் & பண்டு
இணை இயக்குனராக – ஜே டி
தயாரிப்பாளர் – ராம்குண்டலா ஆஷா
மக்கள் தொடர்பு – ஏ ராஜா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here