இலங்கையிலிருந்து நம் மண்ணை நம்பி வந்த குடும்பத்திற்கு இழைக்கப்படும் அநீதியும் தீர்வுமாக பரபரக்கும் கதைக்களம்… இறுதிக்கட்ட படப்பிடிப்பில போஸ் வெங்கட் , கானா உலகநாதன், ஆடுகளம் முருகதாஸ் இணைந்திருக்கும் ‘ஐயம்.’

இலங்கையிலிருந்து வாழ்வாதாரத்தை தேடி நமது மண்ணை நம்பி வரும் ஒரு குடும்பத்திற்கு இங்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு தீர்வு காண்பது மாதிரியான சில உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படம் ‘ஐயம்.’

பாலாஜி, ரெய்னா கரட் இந்த படம் மூலம் நாயகன், நாயகியாக அறிமுகமாகிறார்கள்.

போஸ் வெங்கட், கானா உலகநாதன், ஆடுகளம் முருகதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, மற்ற கதாபாத்திரங்களை தீபா சங்கர் ,கே.பி.ஒய் வினோத், மிப்பு,ரஞ்சன், விஜய் கணேஷ்,கிரேன் மனோகர்,யாசர், சுப்ரமணி, டி.என்.ஏ விஜயலட்சுமி ஆகியோர் ஏற்றுள்ளனர்.

 

படத்தை ந.வசந்த் இயக்க, ‘செந்தில் ஆண்டவர் மூவிஸ்’ ஈஸ்வரன் விஜயன் தயாரிக்கிறார்.

படப்பிடிப்பு பெங்களூர், ஒசூர் தூத்துக்குடி, ராமேஸ்வரம், சென்னை ஆகிய இடங்களில் 40 நாட்களாக நடைபெற்று, இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here