சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘இங்க நான்தான் கிங்கு‘ என்ற படத்தில் டி.இமான் இசையில் உருவாகியுள்ள ‘மாயோனே செல்ல மாயோனே‘ என்ற பாடல் நகரம் முதல் கிராமம் வரை அனைத்து இடங்களிலும் அனைவரும் முணுமுணுக்கும் பாடலாகி, சார்ட்பஸ்டர் ஹிட்டாக மாறியுள்ளது. இணையம் முழுக்க ரீல்ஸ்’களிலும் வைரலாகி வருகிறது.
பட வெளியீட்டுக்கு முன்னதாக பாடலுக்குக் கிடைத்து வரும் மிகப்பெரிய வரவேற்பால் நாயகன் சந்தானம், இசையமைப்பாளர் டி.இமான், படத்தின் தயாரிப்பாளர் கோபுரம் ஃபிலிம்ஸ் அன்புச்செழியன் உள்ளிட்ட படக்குழுவினர் உற்சாகத்தில் மிதக்கின்றனர்.
பட வெளியீட்டுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.
இசையமைப்பாளர் டி.இமான் கிராமத்து இசை, மெலடி, குத்துப்பாட்டு என அனைத்து வகைகளிலும் கலக்கக்கூடியவர். அவரது இசையில் மைனா, கும்கி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா, ரோமியோ ஜூலியட், அண்ணாத்த, விஸ்வசம் எனப் பல படங்கள் முழு ஆல்பம் ஹிட்களாக, இசை ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. அந்த வரிசையில் ‘மாயோனே செல்ல மாயோனே‘ இணைந்துள்ளது.