பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாட, ரியோ ராஜ் நடித்த ‘ஜோ’ படத்தை ஒளிபரப்பும் டிஸ்னி ஹாட்ஸ்டார்!

ரியோ ராஜ், மாளவிகா மனோஜ், பவ்யா த்ரிகா ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடிக்க, ஹரிஹரன் ராமன் இயக்கிய ரொமாண்டிக் பொழுதுபோக்கு திரைப்படம் ‘ஜோ.’ சார்லி, அன்புதாசன், ஏகன் ஆகியோர் முக்கிய கதபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை பொங்கல் பண்டிகையை பார்வையாளர்கள் கொண்டாடும் வகையில் இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம் ஜனவரி 15 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது.

ஜோ (ரியோ) எனும் இளைஞனின் வாழ்வும் அவனது காதலும், அவன் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளையும் பற்றிய கதைதான் இந்தப்படம். இப்படம் ஜோவின் வாழ்வில் குறுக்கிடும் இரு பெண்கள் பற்றியது. முதல் பாதி கல்லூரியில் காதலிக்கும் பெண்ணைப் பற்றியதாக இருந்தாலும், அடுத்த பாதி வாழ்க்கையின் பிற்பகுதியில் அவன் திருமணம் செய்து கொள்ளும் பெண்ணைப் பற்றியதாக அமைந்துள்ளது.

இந்த அழகான ரொமாண்டிக் பொழுதுபோக்கு திரைப்படம், சித்து குமாரின் அழகான இசை மற்றும் ராகுல் K G விக்னேஷின் அற்புதமான ஒளிப்பதிவு மற்றும் ஒரு யதார்த்தமான காதல் கதையுடன் பார்வையாளர்களை நிச்சயமாக நெகிழ வைக்கும் படைப்பாக இருக்கும்.

படத்தை டாக்டர்.டி.அருளானந்து, மேத்யூ அருளானந்து ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here