இளவயது பரதநாட்டியக் கலைஞர்களின் திறமைகள் முன்னிலைப்படுத்தும் விதத்தில் ‘ஜகதாலயா’ அமைப்பு நடத்திய ‘மார்கழி பெஸ்டிவல் மார்கழி நிருத்யோத்சவ் 2024′ என்ற நிகழ்ச்சி கடந்த ஜனவரி 10-ம் தேதி சென்னை சாந்தோம் ஸ்ரீ பாலகணபதி ஹாலில் நடந்தது.
தொழிலதிபர் பத்மஸ்ரீ நல்லி குப்புசாமி, ‘எதிர்நீச்சல்’ சீரியல் நடிகை ராதிகா வைரவேலவன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
ஜகதோ உத்சவில் வெற்றி பெற்ற கலைஞர்கள் திருமதி கீர்த்தனா, திருமதி ஸ்ரீநிதி, கிரி தர்ஷினி ஆகியோருக்கு இந்த நிகழ்வில் பங்கேற்க வாய்ப்பும் ‘யுவ கலாவர்த்தினி’ விருதும் வழங்கப்பட்டது. திருமதி ஸ்ருதி பிரியாவுக்கு ‘ஜகதா கலாவர்த்தினி’ விருது வழங்கப்பட்டது. நல்லி குப்புசாமி விருதுகளை வழங்கி வாழ்த்தினார்.