இந்தியா முழுதும் அதிர்வலைகளை உருவாக்கிய ராமர் கோவில் திறப்பு நாளில் வெளியிடப்பட்ட ‘ஸ்ரீ ராம் ஜெய் ஹனுமான் –  ஒரு சொல்லப்படாத காவியம்’ படத்தின் போஸ்டர்!

மொழித் தடைகளைத் தாண்டி எதிரொலிக்கும் மாறுபட்ட கதைகளை வழங்குவதில், பான் இந்தியா சினிமாவின் அர்ப்பணிப்புக்கு சான்றாக உருவாகவிருக்கும் படம் ‘ஸ்ரீ ராம் ஜெய் ஹனுமான் –  ஒரு சொல்லப்படாத காவியம்.’

கன்னடத்தில் பாராட்டுகளைக் குவித்த பிரபல தயாரிப்பாளர் K. A.சுரேஷ், சுரேஷ் ஆர்ட்ஸ் பேனரின் கீழ், இந்த லட்சியத் திரைப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். பல மொழிகளில் இருந்து மதிப்புமிக்க முன்னணி நட்சத்திர நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்றவுள்ளனர், இது ஒரு மாறுபட்ட மற்றும் புகழ்மிகு ஒருங்கிணைப்பாக இருக்கும்.

இந்த படத்தின் படத்தின் புதுமையான போஸ்டர் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நாளில் வெளியாகியுள்ளது. கவர்ச்சிகரமான அந்த போஸ்டர், அயோத்தியில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்களை எதிரொலிக்கும் வகையில், ரசிகர்களிடம் வரவேற்பை குவித்துள்ளது.  ‘ராமாயணத்தின் சொல்லப்படாத இதிகாசம்’ என்ற டேக்லைன், ராமாயணம் குறித்து இதுவரை ஆவணப்படுத்தப்படாமல் இருக்கக்கூடிய அம்சங்களை வெளிச்சம் போட்டுக் காட்டவிருப்பதை குறிக்கிறது.

கன்னடம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வரவிருக்கும் இந்தத் திரைப்படம், மதிப்புமிக்க ராமாயணத்தின் சொல்லப்படாத அம்சங்களை கூறுவதோடு,  காவியக் கதையின் தனித்துவமான கண்ணோட்டத்தை வழங்கும்.

மலைகள், நெருப்பு, நீர் மற்றும் ராமர் மற்றும் அனுமன் தெய்வீக இரட்டையர் போன்ற கூறுகளைக் கொண்ட இந்த போஸ்டர்,  அயோத்தியில் இந்த மகிழ்ச்சியான தருணத்தின் சாரத்தை படம்பிடித்து காட்டுவதாக அமைந்துள்ளது.  இயக்குநர் அவதூத் இயக்கும்   ‘ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான்’ படம், அதிரடி மிகுந்த ஆக்சன் காட்சிகளுடன், காலத்தால் அழிக்க முடியாத காவியத்தை உயிர்பிக்கும்.

தற்போது படப்பிடிப்புக்கு முந்தைய பணிகளுடன் VFX ஆரம்ப பணிகளும் நடந்து வருகின்றன.  படம் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் தெரியவரும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here