யூடியூபர் அபிஷேக் ராஜா இயக்குநராக அறிமுகமாகும் ‘ஜாம் ஜாம்’ படத்தை தயாரிக்கும் ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி!

ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி’ ஜி. டில்லி பாபு தயாரிக்கும் படங்கள் பார்வையாளர்களைக் கவர்ந்து பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனைப் படைத்து தமிழ்த் திரையுலகில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. வர்த்தக வட்டாரங்கள், விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டையும் பெற்ற இந்தத் தயாரிப்பு நிறுவத்தின் அடுத்த பட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

’ஓ மை கடவுளே’ மற்றும் ‘பேச்சுலர்’ என்ற இரண்டு காதல் வெற்றிப் படங்களைக் கொடுத்தது ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம். இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து ‘லவ் டிரையாலஜி’யை கொடுக்க தற்போது அடுத்த காதல் கதையாக ‘ஜாம் ஜாம்’ படத்தை அறிவித்துள்ளனர்.

அபிஷேக்
டில்லிபாபு

இந்தப் படம் மூலம் பிரபல யூடியூபர் அபிஷேக் ராஜா இயக்குநராக அறிமுகமாகிறார். வழக்கமான ரொமாண்டிக் காமெடி எண்டர்டெயினர் படமாக இது நிச்சயம் இருக்காது என்கிறார் இயக்குநர் அபிஷேக் ராஜா. மாறாக, அதிகமான எண்டர்டெயின்மெண்ட்டோடு ரொமான்ஸ் மற்றும் த்ரிலிங்கான தருணங்களும் இந்தப் படத்தில் இருக்கும் என்கிறார்.

இந்த படம் மிகச்சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களைக் கொண்டுள்ளது. தேனி ஈஸ்வர் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டராக இருந்து இயக்குநராக மாறி ’முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்’ என்ற மலையாளப் படத்தை இயக்கிய அபினவ் சுந்தர் நாயக் இந்தப் படத்திற்கு படத்தொகுப்பு செய்கிறார். நவதேவி ராஜ்குமார் ஆடை வடிவமைப்பையும், அழகியகூத்தன் மற்றும் சுரேன் ஜி ஒலிப்பதிவையும் கவனிக்கிறார்கள். இப்படத்திற்கு பிரதீப் ராஜ் கலை இயக்குநராக உள்ளார்.

படம் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் தெரியவரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here