பல ஆண்டுகளாக, இந்த இணையற்ற குணங்கள் மற்றும் நடிப்பால் நம்மை கவர்ந்த பல திறமையான நடிகைகளை நாம் பார்த்திருக்கிறோம். அந்த வரிசையில், இப்போது வரவிருக்கும் பலத் திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கும் ஜிஜ்னா ராதாகிருஷ்ணனின் அறிமுகத்தை திரையுலக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
தியேட்டர் ஆர்டிஸ்ட்டான ஜிஜ்னா ராதாகிருஷ்ணன் ஆங்கிலம், இந்தி, மராத்தி, மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் சரளமாகப் பேசக்கூடியவர். தற்போது, அவர் பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். ‘மே ஹூன் மூசா’ படத்தில் சுரேஷ் கோபியின் மகளாக நடித்தார். மறைந்த இயக்குநர் சித்திக் வழிகாட்டுதலின் கீழ் அவரது மற்றொரு படம் ‘போரட்டு நாடகம்’ மே மாதம் வெளியிட தயாராக உள்ளது. இதுமட்டுமல்லாது தற்போது அவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள சலாம் புஹாரியின் ‘உடம்பஞ்சோலா விஷன்’ படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
அவருக்குப் பிடித்த நடிகராக அமிர் கான் பெயரைக் குறிப்பிடுபவர், இன்ஸ்பிரேஷன் என நடிகை சுஷ்மிதா சென் மற்றும் ஓப்ரா வின்ஃப்ரே ஆகியோரது பெயரை உற்சாகமாக சொல்கிறார். பல்வேறு கதாபாத்திரங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்றத் தனது விருப்பத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். அதை நிறைவேற்ற தமிழ் ரசிகர்களின் ஆதரவு இருக்கும் என் கிறார் நம்பிக்கையுடன்.