மூன்று ஹீரோயின்களோடு ஜெயம் ரவி நடிக்கும் ‘ஜீனி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

ஜெயம் ரவி நடிக்க, இயக்குநர் மிஷ்கினின் ‘பிசாசு’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ ஆகிய படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றிய அர்ஜுனன் Jr இயக்கும் படம் ‘ஜீனி.’

ஜெயம் ரவியோடு கல்யாணி பிரியதர்ஷன், கிர்த்தி ஷெட்டி, வாமிகா கபி, தேவயானி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தை, தொடர்ந்து கதையம்சமுள்ள படங்களைத் தயாரித்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிற ‘வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்’ டாக்டர். ஐசரி கே கணேஷ் தயாரித்துள்ளார். அவர், இந்த படம் பார்வையாளர்களுக்கு வியக்க வைக்கும் சினிமா அனுபவத்தைக் கொடுக்கும் என உறுதியளித்துள்ளார். அவர் சொல்வதற்கு சான்றாக அமைந்துள்ளது ஜீனி படத்தின் வித்தியாசமான முதல் பார்வை போஸ்டர்.

படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, ”ஜெயம் ரவிக்கு இந்த படத்தில் இதுவரை பார்க்காத முற்றிலும் புதுமையான மற்றும் ஆச்சரியமான தோற்றத்துடன் கூடிய அசாதாரண கதாபாத்திரம். அவருடன் இணைந்து பணிபுரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. அவருடைய அர்ப்பணிப்பும் ஈடுபாடும் உண்மையிலேயே பாராட்டுக்குரியது. ஸ்கிரிப்ட் விவாதங்கள் ஒரு வாரத்திற்கும் மேல் இருக்கும். ஆனால், படப்பிடிப்பை அரை நாளில் முடித்து விடுவோம். ஒரு சரியான ஷாட்டுக்காக கூடுதலாக உழைக்கும் ஜெயம் ரவியிடம் இருந்து நாங்கள் நிறைய கற்றுக் கொண்டோம்.

குடும்ப உறவுகளை மையமாகக் கொண்டு ஆக்‌ஷன், ஃபன், எமோஷன் போன்ற விஷயங்கள் கலந்து இந்த படம் உருவாகியிருக்கிறது. படம் வலிமையான பெண் கதாபாத்திரங்களை மையமாக கொண்டது என்பது அதன் முதல் பார்வையில் இருந்து தெரிந்து கொள்ளலாம். ஒரு தாய், மகள், சகோதரி மற்றும் மனைவியின் உணர்ச்சிகளை சுற்றிவரும் படமாக இருக்கும். வன்முறை, போதைப்பொருள் மற்றும் இரத்தம் இதெல்லாம் இல்லாமல் மகிழ்ச்சியான ஒரு அனுபவத்தை பார்வையாளர்களுக்கு கொடுப்பதுதான் என் நோக்கம். கிட்டத்தட்ட 75% படப்பிடிப்பை முடித்துள்ளோம். இன்னும் 3 பாடல்கள் மட்டுமே உள்ளன. அதோடு படப்பிடிப்பு மொத்தமும் முடிந்து விடும்” என்றார்.

யானிக் பென் சண்டைக் காட்சிகளை அசத்தலாக அமைக்க. மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்கிறார். பிரதீப் இ ராகவ் எடிட்டிங் பணியைக் கவனிக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here