மீன் வியாபாரியின் மகளுக்கு பரத நாட்டிய அரங்கேற்றம்; திரைப்படம் போல் கவனத்தை ஈர்க்கும் ‘ஜதி’ ஆல்பம். 

பா.விஜய் வரிகளில், பைஜூ ஜேக்கப் இசையில், மேக்னம் ஸ்டுடியோஸ் டாக்டர் எஸ்.கோமதி தயாரித்துள்ள ஆல்பம் ‘ஜதி.’

ஆல்பத்தை இயக்கிய ரசல் ஒரு முழுநீள திரைப்படம் பார்க்கும் உணர்வை ஏற்படுத்தி உள்ளார். கேட்போருக்கு தன்னம்பிக்கையூட்டும் விதமாக அமைந்துள்ள இந்த ஆல்பம் பாடல் பற்றி…

கூடை சுமந்து மீன் வியாபாரம் செய்யும் பெண்ணின் சிறிய மகள், பரத நாட்டியத்தின் மீது ஆர்வம் கொள்கிறாள். மகளின் ஆசையை நிறைவேற்ற தாய் முயற்சிக்கும் போது, உன்னால் இதற்கெல்லாம் செலவு செய்ய முடியாது. தகுதிக்கு மேல் ஆசைப்படாதே எனக்கூறி, விரட்டப்படுகிறார்கள்.

இதைப் பார்த்த மற்றொரு குரு, அந்தச் சிறுமியின் ஆர்வத்தை புரிந்துக் கொண்டு, அவளுக்கு பரதநாட்டியம் கற்றுக் கொடுத்து, அரங்கேற்றம் செய்து வைக்கிறார்.

மகளின் கனவை நிறைவேற்றும் தாயாக கோமதி நடித்துள்ளார். மகளாக சரண்யாஶ்ரீ நடித்துள்ளார். கற்றுக் கொடுக்கும் குருவாக ஐஸ்வர்யா நடிக்க, இவர்களுடன் முரளி நடித்துள்ளார்.

இந்த ஆல்பத்தை, வசி மியூசிக் (Vasy Music) ஆகஸ்ட் 9-ம் தேதி வெளியிடுகிறது!

தொழில்நுட்பக் குழு:- ஒளிப்பதிவு – ஜெகதீஷ் வி.விஸ்வம்; நடனம் – வி.அர்ச்சனா ராம்; எடிட்டிங் – வீர செந்தில்ராஜ்; கிரியேட்டிவ் ஹெட் – கே.பாஸ்கர்; புரொடக்ஷன் கன்ட்ரோலர் – டாக்டர் பி.கமலக்கண்ணன்; ஸ்டில்ஸ் – கே.பி.பிரபு, பிஆர்ஓ – கோவிந்தராஜ்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here