நகைச்சுவையோடு, புறக்கணிக்கப்பட்ட கலைஞர்களை கொண்டாட ஜெயா டி.வி.யில் ஞாயிறு பகல் 12 மணிக்கு ‘கலக்கல் காமெடி கேங்ஸ்டர்ஸ்.’

ஜெயா தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி ‘கலக்கல் காமெடி கேங்ஸ்டர்ஸ்.’

நகைச்சுவை நிகழ்ச்சிகளில்  ஒரு மாறுபட்ட முயற்சியாக சமூக வலைதளங்களில் நன்கு அறியப்பட்ட முகங்கள் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் மூன்று குழுக்களாக  பிரிந்து தங்கள் திறமையை வெளிப்படுத்துவார்கள்.

அந்த மூன்று குழுக்களின் வழிகாட்டிகளாக நாஞ்சில் விஜயன், அமர் மற்றும் பழனி பட்டாளம் ஆகிய மூவரும் பங்கேற்று போட்டியாளர்களை வழி நடத்துவார்கள். இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கல்யாணி . 

இன்ஸ்டாகிராமிலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஐந்து பெண்கள் இந்நிகழ்ச்சியின் நடுவர்களாக இருப்பது இந்நிகழ்ச்சியின் இன்னொரு சிறப்பு. நகைச்சுவையில் மக்களை மகிழ்விப்பதோடு நின்று விடாமல் சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட பல கலைஞர்களை கொண்டாடுகிற மேடையாகவும் இந்நிகழ்ச்சி மிளிர்கிறது.இந்த நிகழ்ச்சியை ஜெயா டிவி யோடு இணைந்து ஐரா நிறுவனத்தின் சார்பில் D.ராஜரத்தினம் தயாரித்து இயக்கி வருகிறார். மகிழ்ச்சியும், கலகலப்பும், நகைச்சுவையும் ஒன்றாய் இணைந்த இந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சி ஜெயா தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் பகல் 12 மணிக்கும் அன்று இரவு 10 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here