திரையரங்குகளை அதிகரிக்கச் செய்த வெற்றி! ‘ஜம்பு மகரிஷி’ படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் 2-ம் பாகம் பற்றிய அறிவிப்பு!

‘டி.வி.எஸ். ஃபிலிம்ஸ்’ எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பாலாஜி கதையின் நாயகனாக நடித்து தயாரித்திருக்கும் படம் ‘ஜம்பு மகரிஷி’. இந்த படத்தில் கதைநாயகனாக பாலாஜி, ‘டத்தோ’ ராதாரவி, டெல்லி கணேஷ், மீரா கிருஷ்ணன், ‘பாகுபலி’ பிரபாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பகவதி பாலா ஒளிப்பதிவு செய்ய, புவனேஸ்வரன் இசையமைத்திருக்கிறார். ஜம்பு மகரிஷி எனும் சித்தரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி, தமிழ் – தெலுங்கு என இரு மொழிகளில் தயாரான இந்த படம் பல்வேறு தடைகளைக் கடந்து கடந்த ஏப்ரல் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

அதை தொடர்ந்து படத்துக்கு கணிசமான வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் அந்த வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

நிகழ்வில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் பாலாஜி பூபாலன், ஒளிப்பதிவாளர் பகவதி பாலா, படவிநியோகஸ்தர் ஜெனிஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய படத்தின் இயக்குநர் பாலாஜி, ”படத்திற்கு நாங்கள் நினைத்ததை விட நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது. திரையரங்குகளின் எண்ணிக்கை 125 ஆக அதிகரித்துள்ளது. விரைவில் ஜம்பு மகரிஷி 2-ம் பாகம் உருவாகவுள்ளது” என்றார்.

பத்திரிகையாளரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் பற்றி நிருபர் ஒருவர் கேள்வியெழுப்பிய போது, ”பெண்களை சாமி மாதிரி வணங்கும் நாடு நம்நாடு. பயில்வான் ரங்கநாதன் பெண்களைப் பற்றி இழிவாக பேசுவது தவறான செயல். இப்படி பேசி பணம் சம்பாதிப்பதை விட அவர் மலத்தை சாப்பிடுவதே மேல்” என ஆவேசப்பட்டார். மேலும் அவர், ‘இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here