தகராறு செய்து போலீஸாரால் கண்டிக்கப்பட்ட பெப்சி யூனியன் நபர்கள்! பரபரப்பான ‘ஜெய் சீதா’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்.

சிறுமுதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர் தயாரிப்பாளர் காமராஜ் தயாரிப்பில், சம்பத் இயக்கிக் கொண்டிருக்கும் ‘ஜெய் சீதா’ படப்பிடிப்பில் இன்று (8.5. 2023) மதியம், பெப்சி யூனியன் நபர்கள், தங்களின் உறுப்பினர்களை வைத்துதான் படப்பிடிப்பு நடந்த வேண்டும் என்று சொல்லி தகராறு செய்தனர்.

சிறுமுதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ஆர்.கே.அன்புச் செல்வனுக்கு தகவல் தெரிந்ததும், உடனடியாக போலீஸ் வரவழைக்கப்பட்டு, தகராறு செய்தவர்களிடம், ‘சிறுமுதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்கம், பெப்சி யூனியனில் எந்த ஒப்பந்தமும் போடவில்லை. எந்த சங்கத்திற்கும் நாங்கள் கட்டுப்பட்டவர்கள் இல்லை’ என்பதை எடுத்துச் சொல்லி கண்டித்து அனுப்பி வைத்தனர்.

”சிறுமுதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் தயாரிக்கும் படத்தை நிறுத்துவதற்கு ‘பெப்சி யூனியன்’ உட்பட எந்த சங்கத்திற்கும் அதிகாரம் இல்லை” என சங்கத் தலைவர் ஆர்.கே.அன்புச் செல்வன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here