ஷாருக்கான் நடிக்க, அட்லீ இயக்யிருக்கும் ஆக்ஷன் எண்டர்டெய்னர் திரைப்படம் ‘ஜவான்.’ பெரியளவில் எதிர்பார்க்கப்படும் இந்த படத்தின் அப்டேட் அனைத்தும் ரசிகர்களின் உற்சாகத்தை புதிய உச்சத்திற்கு எடுத்து சென்றுள்ளது.
சமீபத்தில் வெளியான விறுவிறுப்பான ப்ரிவ்யூ, மொட்டை தலையுடன் புது அவதாரத்தில் தோன்றும் SRK, அதிரடி அவதாரத்தில் காட்சியளிக்கும் நயன்தாராவின் கேரக்டர் போஸ்டர் இவற்றைத் தொடர்ந்து, இப்போது படத்தின் மற்றொரு புதிய கதாபாத்திரம் பற்றிய சிறு க்ளிம்ஸ் வெளியிட்டுள்ளனர். அது யாராக இருக்கும் என்ற ஆர்வத்தை தூண்டியுள்ளது.
படக்குழுவினர் தங்கள் சமூக ஊடகத்தில், அவர் உங்களை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார்! நீங்கள் அவருக்காக சிறிது காத்திருங்கள்’ என்று பதிவிட்டுள்ளனர்.
He’s watching you closely! Watch out for him.#Jawan pic.twitter.com/CvSJMT5PNE
— Red Chillies Entertainment (@RedChilliesEnt) July 23, 2023