பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவர் வாழ்க்கை வரலாறு ‘தேசிய தலைவர்’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகி, வரும் அக்டோபர் 30-ம் தேதி பான் இந்திய படமாக வெளிவரவிருக்கிறது. படத்தை ஆர்.அரவிந்தராஜ் இயக்குகிறார்.
ஜெ.எம். பஷீர் முத்துராமலிங்கத் தேவராக நடிக்கும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.
இந்த நிலையில், கர்நாடக துணை முதல்வர்
டிகே சிவகுமாரை அவரது இல்லத்தில் தேசிய தலைவர் பட நாயகன் ஜெ எம் பஷீர், ஏஎம் சௌத்ரிதேவர் மற்றும் கர்நாடக தேவர் அமைப்பை சார்ந்தவர்களுடன் சந்தித்து துணை முதல்வராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார்.
தேசிய தலைவர் திரைப்படம் கன்னடத்தில் ‘ராஷ்டிரிய நேத்தா’ என்ற பெயரில் வெளியாகவிருக்கிறது. அதற்காக ஜெ எம் பஷீருக்கு கர்நாடக துணை முதல்வர் வாழ்த்து தெரிவித்து, நாயகன் தேவர் போலவே உள்ளதாக குறிப்பிட்டுப் பாராட்டினார்.
இந்த சந்திப்பின்போது கர்நாடகாவில் தேசிய தலைவர் தேவர் சிலை அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது.