காலை 9.00 மணிக்கு சின்ன சின்ன ஆசை இளம் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட இளம் நாயகி அனகாவுடன் ஒரு ஜாலி ட்ரிப்.
காலை 9.30 மணிக்கு லட்சிய இளைஞர்களை உருவாக்குவது வீடா? நாடா? என்னும் தலைப்பில் சொல்லின் செல்வர்பி மணிகண்டன் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம்.
நண்பகல் 12 மணிக்கு விடாது சிரிப்பு நடிகவேல் எம் ஆர் ராதா இன்று நம்முடன் இருந்திருந்தால் அவர் எதையெல்லாம் நகைச்சுவையாக கிண்டல் அடித்திருப்பார் என்பதை அவரை போலவே நடித்து அசத்தியிருக்கிறார்கள் மிமிக்ரி கலைஞர்கள்.
மாலை 4 மணிக்கு எங்கே சுதந்திரம் விவாத நிகழ்ச்சி. இன்றைய காலகட்டத்தில் மாமியார் மருமகள் மகன் போன்ற உறவுகளுக்குள் இருக்கும் மற்றும் எதிர்பார்க்கும் சுதந்திரம் பற்றி விவாதிக்கும் நிகழ்ச்சியை நடிகர் ரமேஷ் கண்ணா தொகுத்து வழங்க நடுவர்களாக நடிகர் அனுமோஹன் நடிகை சோபியா மற்றும் மனநல மருத்துவர் அசோகன் கலந்துகொண்டு விவாதத்தை மேலும் சுவாரஸ்யமாக்கியுள்ளனர்.மாலை 5 மணிக்கு சமைத்துப் பார் புதுமையான சமையல் நிகழ்ச்சி சமூகவலைத்தளங்களில் பிரபலமான உணவு பிரியர்களை சமைக்கவைக்கும் சமையல் போட்டி நிகழ்ச்சி.இரவு 9.30 மணிக்கு மனதை வருடும் இசையாய் பிரபல வயலின் இசை கலைஞர் அபிஜித் நாயர் குழுவினரின் இசை நிகழ்ச்சி பொன் மாலைப் பொழுது.