ஷாரூக்கான் நடிப்பில் உருவாகி பெரிதும் எதிர்பார்க்கபடும் ‘ஜவான்’ படத்திலிருந்து ‘நாட் ராமையா வஸ்தாவையா’ என்ற பாடல் மூன்று மொழிகளில் வெளியாகியுள்ளது. அனிருத் இசையிலிருக்கும் ஈர்ப்பு, நடனத்தில் தெறிக்கும் உற்சாகம் இளையதலைமுறையை வெகுவாக கவர்ந்துள்ளது. பாடல் தங்களை பார்ட்டி மூடுக்கு அழைத்துச் செல்வதாக குறிப்பிட்டு இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
பாடலின் இந்தி பதிப்பில் இந்த பாடலை, சமீபத்தில் பல வெற்றிப்பாடல்களை தந்த, பிரபலமான பாடலாசிரியர் குமார் எழுதியுள்ளார். அனிருத், விஷால் தத்லானி மற்றும் ஷில்பா ராவ் ஆகிய திறமையான இசை கலைஞர்கள் பாடலுக்கு குரல் கொடுத்துள்ளனர், வைபவி மெர்ச்சன்ட் அழகாக நடனம் அமைத்திருக்கிறார். ஆஸ்கார் விருது பெற்ற, புகழ்மிக்க பாடலாசிரியர் சந்திரபோஸ் தெலுங்குப் பாடலை எழுதியுள்ளார். ஸ்ரீராம சந்திரா, ரக்ஷிதா சுரேஷ் மற்றும் அனிருத் தெலுங்குப் பதிப்பின் பாடலைப் பாடியுள்ளனர்.தமிழில் பாடல் வரிகளை பிரபலமான பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். அனிருத் ரவிச்சந்தர், ஸ்ரீராம சந்திரா மற்றும் ரக்ஷிதா சுரேஷ் ஆகியோர் தங்களின் வசீகரமான குரல்களில் பாடியுள்ளனர். வைபவி மெர்ச்சன்ட் அழகாக நடனம் அமைத்துள்ளார்.
‘ஜவான்’ படம் பற்றி…
ஷாரூக்கான், நயன்தாரா நடித்துள்ள இந்த படத்தில் ஏராளமான பாலிவுட் நடிகர், நடிகைகளோடு, நம்மூர் விஜய் சேதுபதி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.தமிழில் ‘ராஜா ராணி’, ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ படங்களை இயக்கியுள்ள அட்லீ இந்த படத்தை இயக்கியுள்ளார்.
அனிருத் இசையமைத்துள்ளார்.
படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7; 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
படத்தை ‘ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனம் வழங்குகிறது. கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறார்.