வித்தியாசமான நிகழ்ச்சிகளை தொடர்ந்து வழங்கி வரும் ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சி தேதி சொல்லும் சேதி எனும் ஒலி ஒளி தொகுப்பை காலை முதல் இரவு வரை ஒவ்வொரு மணி நேர இடைவேளையிலும் தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறது.
அந்த தொகுப்பில் ஒரு தேதி நமக்கு சொல்லும் சேதி’யாக அந்நாளில் உள்ள தனி சிறப்புகளான வரலாற்று நிகழ்வுகள் தேசிய மற்றும் உலக அளவில் அனுசரிக்கபடும் நாட்களின் சிறப்புகள் மற்றும் பிரபல தலைவர்களின் பிறந்த மற்றும் மறைந்த நாட்களை நமக்கு நினைவூட்டும் விதமாக பல பயனுள்ள புதிய தகவல்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. தொகுப்பாளர் சூர்யா இந்த நிகழ்ச்சிக்கு எழுத்து மற்றும் குரல் வடிவம் வழங்குகிறார்.