‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிப்பில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி சமீபத்தில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் பெரியளவில் வெற்றி பெற்று வசூலில் சாதனை படைத்து வருகிறது.
இந்த நிலையில் படத்தை தமிழகமெங்கும் வெளியிட்ட ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பாக, அந்த நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர்கள் எம்.செண்பகமூர்த்தி, அர்ஜூன் துரை, விநியோக நிர்வாகி சி. ராஜா ஆகியோர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.