வெறித்தனமாக வசூல் குவிக்கும் ‘ஜவான்.’ வெளியான 11 நாட்களில் 800 கோடி தாண்டி சாதனை!

ஷாருக்கான் நடிப்பில், அட்லீ இயக்கத்தில் உருவாகி வெளியான ஜவான்’ இநதிய சினிமாவில் வசூல் குவிப்பில் தடுக்க முடியாத சக்தியாக உருவெடுத்து, இந்திய பாக்ஸ் ஆபீஸை அடித்து நொறுக்கியது. இந்த வெறித்தனமான வெற்றிப் புயல் வெளிநாட்டு சந்தைகளையும் தாக்கியுள்ளது. படம் வெளியான 11 நாட்களில் 858.68 கோடிகளை குவித்து, 800 கோடி மைல்கல்லை மிக வேகமாக தாண்டிய இந்திய திரைப்படம் என்ற குறிப்பிடத்தக்க சாதனையையும் படைத்துள்ளது!

ஜவானின் உலகளாவிய ஆதிக்கம் இத்துடன் நிறைவடையவில்லை. ComScore அறிக்கையின்படி, உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் டாப் 10 வார இறுதி அட்டவணையில் இப்படம் 3வது இடத்திற்கு உயர்ந்துள்ளது. படத்தின் உலகளாவிய ஈர்ப்பு மற்றும் எல்லை தாண்டிய பார்வையாளர்களை கவரும் திறனுக்கு இது ஒரு சான்றாகும்.

இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள SRK ரசிகர்களுக்கு, Jawan ஒரு சினிமா திருவிழா கொண்டாட்டமாக அமைந்தது. இந்தியாவில், மின்னல் வேகத்தில் 400 கோடியை வசூலித்தும், உலக அரங்கில், 11 நாட்களில் 800 கோடி ரூபாய் வசூல் என்ற மைல்கல்லை எட்டியும் இதுவரையிலான திரையுலக வசூல் சாதனைகளை முறியடித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here