இந்திய சினிமா ரசிகர்களின் மிகவும் விருப்பத்துக்குரிய நட்சத்திர ஜோடி ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன். ‘ஓம் சாந்தி ஓம்’ மற்றும் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ போன்ற படங்களில் இவர்களின் மாயாஜாலம் ரசிகர்களால் மறக்க இயலாது.
‘லுங்கி டான்ஸ்..’, ‘டார்ட்-ஈ- டிஸ்கோ..’ போன்ற தரவரிசையில் முன்னிலையில் பெற்ற பாடல்கள் – இவர்களின் மாயாஜால கெமிஸ்ட்ரியின் வரலாற்றுக்கு சான்றாகும். இது ரசிகர்களை தொடர்ந்து மயக்கி வருகிறது.
பிரமாண்ட வெற்றி பெற்ற ‘ஜவான்’ திரைப்படத்தில் ஷாருக் கான் – தீபிகா படுகோன் இடையேயான அட்டகாசமான கெமிஸ்ட்ரிக்கு ரசிகர்கள் பேராதரவு அளித்து வருகின்றனர். இவர்களின் தீவிர ஆதரவாளர்களை மகிழ்விக்க, படத்தின் தயாரிப்பாளர்கள் ‘பட்டாசா..’ எனத் தொடங்கும்.. இந்த ஜோடி திரையில் மாயாஜாலம் நிகழ்த்தியிருக்கும் பாடலின் காணொளியை, இப்படத்தின் இயக்குநர் அட்லீயின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட்டுள்ளனர்.
இந்த ஆண்டின் பொழுதுபோக்கு பாடல்கள் ஒன்றாக அமைந்த இந்தப் பாடல் வரிகளும் ரசிகர்களை வெகுவாக வசீகரித்திருக்கிறது. அதன் காட்சி அமைப்புகள் பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த பாடலின் வரிகளை பாடலாசிரியர்கள் விவேக் மற்றும் அறிவு எழுதி இருக்க, பின்னணி பாடகர் நகாஷ் அஜீஸ், அறிவு மற்றும் பின்னணி பாடகி ஜொனிதா காந்தி ஆகியோர் பாடியிருக்கிறார்கள். இதற்கு அனிருத் இசையமைக்க, ஃபாரா கான் நடனம் அமைத்துள்ளார்.