1000 கோடியை தாண்டிய வசூல்! உலகளவில் பரபரப்பை ஏற்படுத்திய ‘ஜவான்.’ 

ஷாருக்கானின் ‘ஜவான்’ வெளியான 19 நாட்களில் உலகம் முழுவதும் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து புதிய சாதனையை படைத்திருக்கிறது. இதன் மூலம் உலகளவில் இந்த படம் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

ஒரே ஆண்டில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான இரண்டு படங்கள் தலா 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து புதிய சாதனையை படைத்திருப்பதுடன்.. இத்தகைய சாதனையைப் படைத்த ஒரே நடிகர் என்ற பெருமிதத்தையும் அவர் பெற்றிருக்கிறார்.

ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை மறு வரையறை செய்துள்ளது. இப்படத்தின் கதைக்களம் மற்றும் நட்சத்திர பட்டாளங்களின் நடிப்பு மூலம் பார்வையாளர்களை வசீகரித்துள்ளது. சாதனை புத்தகத்தில் புதிய அத்தியாயத்தை இந்த திரைப்படம் எழுதி இருக்கிறது.

ஜவான் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவதால், இப்படத்தின் வசூல் புதிய சாதனையை படைக்கும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படத்திற்கு நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களிடமிருந்து அபிரிமிதமான வரவேற்பு கிடைத்து வருவதால் சந்தேகத்திற்கு இடமின்றி இந்தத் திரைப்படம் மாபெரும் சினிமா ஆற்றலாக கணக்கிடப்பட வேண்டும்.

மேலும் இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து வசூல் செய்து வருவதால் இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள ஷாருக்கான் ரசிகர்கள் ஜவானை திருவிழா போல் கொண்டாடி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here