வசூலில் 25 நாட்களில் 600 கோடியை தாண்டிய முதல் இந்தி படமாக சாதனை படைத்த ‘ஜவான்.’ 4-வது வாரத்திலும் தொடரும் ரசிகர்களின் வரவேற்பு!

ஜவான் அதிக வசூல் செய்த ஷாருக்கானின் இரண்டாவது படம் மட்டுமல்ல, 25 நாட்களில் 600 கோடியை தாண்டிய முதல் இந்தி படமாக சாதனை படைத்திருக்கிறது. வெளியான நான்காவது வாரத்திலும் படம் இன்னும் வசூலில் நிலையான சாதனை படைத்து வருகிறது!

ஜவான் இந்தியில் 547.79 கோடிகள் மற்றும் இந்திய பாக்ஸ் ஆபிஸில் மொத்தம் 607.21 கோடிகளை ஈட்டியுள்ளது, அதே நேரத்தில் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில், படம் 1000 கோடிகளை வசூலித்து அனைத்து சாதனைகளையும் முறியடித்து, உலகம் முழுவதுமாக 1043.21 கோடியை வசூலித்து சாதனை செய்துள்ளது! இந்த மகத்தான சாதனைகள் அனைத்தும் வெறும் 25 நாட்களில் முறியடிக்கப்பட்டன என்பது குறிப்பிடதக்கது !

ஷாருக்கான் நடிப்பில் உருவான ஜவான் இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வசூல் செய்த இந்திப் படமாக மாறியுள்ளது, மேலும் அவர் சாதனைகளை முறியடித்து, திரைத்துறை வசூல் வரையறைகளை மாற்றி அமைத்ததன் மூலம் மீண்டும் சரித்திரம் படைத்திருக்கிறார்.

‘“ஜவான்” திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது.

புதிய பட வெளியீடுகளால் ஜவானின் வசூல் பாதிக்கப்படவேயில்லை, மேலும் நான்காவது வாரத்தில் கூட ரசிகர்கள் கூட்டமாக படத்தை ரசிக்கிறார்கள் மற்றும் அதைப் பாராட்டுகிறார்கள் என்பது இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு எடுத்துக்காட்டாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here