தியேட்டர்களுக்கு வந்து ஒருமாதமான பின்னும் ரசிகர்களிடம் ஈர்ப்பு குறையாத ஜவான்! வெளிநாடுகளில் இதுவரை பார்க்காத வசூல் சாதனை!

ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு மாதமான நிலையில், பார்வையாளர்கள் மத்தியில் படத்தின் மீதான ஆர்வம் எந்த வகையிலும் குறையவில்லை.

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபீஸில் படம் ஒன்றன் பின் ஒன்றாக புதிய சாதனைகளை படைத்து வருகிறது.

உலகின் பல்வேறு பகுதிகளில் தனது வலுவான முத்திரையைப் பதித்த ஜவான், தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சந்தையிலும் ஒரு தனித்துவமான முத்திரையைப் பதித்துள்ளது.  இப்படம் மத்திய கிழக்கில் நம்பர் 1 இந்திய திரைப்படமாக வசூலில் சாதனை படைத்துள்ளது.

https://www.instagram.com/p/CyA6pxXogBS/?utm_source=ig_web_copy_link

சர்வதேச விநியோக சந்தையின் துணைத் தலைவர் நெல்சன் டிசோசா இது குறித்து பேசும்போது, ‘‘ஜவான் சர்வதேச சந்தைகளில் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது மற்றும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு, மத்திய கிழக்கில் $16 மில்லியனைத் தாண்டிய முதல் இந்தியத் திரைப்படமாக சாதனை படைத்துள்ளது. இன்றுவரை வெளிநாடுகளில் 44.43 மில்லியன் வசூல் செய்து நம்பர் 1 இந்திய திரைப்படமாக வரலாற்று சாதனை படைத்துள்ளது. இத்தனை பெரிய வரவேற்பையும் வசூலையும்  இதற்கு முன்பு பார்த்ததே இல்லை. மேலும் ஷாருக்கான் நடிப்பில் அடுத்து வரக்கூடிய டன்கி இன்னும் பல  புதிய சாதனைகள் படைக்குமென  எதிர்பார்க்கிறோம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here