முன்னணி இயக்குநர் ஏ ஆர் முருகதாஸிடம் சர்கார், தர்பார் படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய, பாபு விஜய் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். மிக முக்கிய சமூக பிரச்சனை ஒன்றை, காதலும் திரில்லரும் கலந்து, கமர்ஷியல் அம்சங்களுடன் ரசிகர்கள் விரும்பும் படைப்பாக உருவாக்கவுள்ளார்.
பிரபஞ்சம் அடுத்தடுத்து ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் ஏராளம், ஒருவன் வாழ்வில் அடுத்தடுத்து ஏற்படும் ஆச்சரிய மாற்றங்கள், அதிர்வுகள் தான் இக்கதையின் மையம். நம் நாட்டில் நிகழ்கின்ற, தொடர்ந்து நிகழப்போகிற ஒரு பெரும் ஆபத்தினை பற்றி, இப்படம் பேசவுள்ளது. காதலும் களவும் என்ற அன்பின் ஐந்திணையைக் கொண்டு அழகான வாழ்வியல் படமாக இப்படம் உருவாகவுள்ளது.
ஜெய் நாயகனாக நடிக்கிறார். மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடிக்கிறார். யோகிபாபு, கேஜிஎஃப் புகழ் கருடா ராம், ஶ்ரீமன், ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் துவக்க விழாவில், தயாரிப்பாளர் தனஞ்செயன் கிளாப் போர்டு அடிக்க, இயக்குநர் சசி கேமராவை ஆன் செய்து படக்குழுவிற்கு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொடைக்கானல், நெல்லூர் போன்ற இடங்களில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. படம் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் தெரியவரும்.
படக்குழு:- கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டிங் டார்லிங் ரிச்சர்ட்சன், கலை இயக்கம் எஸ் கண்ணன், தயாரிப்பு மேற்பார்வை வி. சிவராமன், உடை வடிவமைப்பு கமலி எஸ்மற்றும் பி. செல்வம், மேக்கப் அப்துல் ரசாக் மற்றும் அப்துல் ரஷீத், ஸ்டண்ட் மாஸ்டர் முரளி.ஜி ஆகியோர் தொழில் நுட்ப குழுவில் பணியாற்றுகிறார்கள்.