தீபாவளி வெளியீடான ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ தந்த வரவேற்பு. உற்சாகத்தில் நடிகை சஞ்சனா நடராஜன்!

தீபாவளி வெளியீடாக நவம்பர் 10;2023 அன்று வெளியான ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தில் எஸ் ஜே சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து பாராட்டுக்களை குவித்து வருகிறார் சஞ்சனா நடராஜன்.

பா ரஞ்சித் இயக்கிய ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் கலையரசன் ஜோடியாக நடித்து விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றவர் இவர்.

சஞ்சனா நடராஜன் தமிழ் மொழியில் மட்டுமல்ல வேறு மொழியிலும் பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். தமிழ் பேசும் சென்னை வாழ் பெண்ணாக இருந்தாலும், தற்போது வேறு சில மொழிகளிலும் நடித்து வருகிறார் அவற்றில் வெளிவர உள்ள படங்கள் தமிழில் ‘பாட்டில் ராதா,’. பிரபல திரைப்பட தயாரிப்பாளர் பிஜாய் நம்பியாரின் ‘போர்’ மற்றும் மலையாளப் படமான ‘டிக்கி டக்கா.’

திரையுலகில் தொடர்ந்து சவாலான பாத்திரங்களை ஏற்று நடித்து வருவதால் அவருக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பது உறுதியாகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here