மகள்களை கரை சேர்க்க முயற்சிக்கும் சோமநாதன்; இழந்த வீட்டை மீட்டெடுக்க முயற்சிக்கும் சந்திரிகா… பரபரப்பாக பயணிக்கும் ஜெயா டி.வி.யின் ‘அக்னி பிரவேசம்.’

ஜெயா டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் மங்களகரமான நெடுந்தொடர் அக்னி பிரவேசம். வினு சக்ரவர்த்தி, யுவராணி, ராம் ராஜாசேகர், பரத் கல்யாண், விஷ்வா மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்தொடரின் கதைக்கரு குடும்பங்கள் கொண்டாடும் விதமாக பல திருப்பங்களும் கருத்துகளையும் கொண்டது.

சந்திரிகா (யுவராணி) இந்நெடுந்தொடரின் நாயகி, மூன்று தங்கைகளுடன் பிறந்த இவர் ஒரு அலுவலகத்தில் வேலை பார்க்கிறார்.இவரின் தந்தை சோமநாதன் தன் மகள்களுக்கு நல்ல திருமணம் செய்து  வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தன் பூர்விக வீட்டை விற்க முற்படுகிறார்,இவரின் மனநிலையை புரிந்து கொண்ட மகளாக உள்ளார் சந்திரிகா.இதனால் இவர் தனக்கு திருமணம் வேண்டாம் ,என் தங்கைகளுக்கு திருமணம் செய்து வைப்பதே தனது கடமை என்று நினைக்கிறாள்.

ஆனாலும் சந்திரிகாவின் அம்மாவிற்கு சந்திரிகாவிற்கு முதலில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற ஆசையில் வரன் தேட ஆரமிக்கிறார்கள் . அதற்குள் தனது பூர்வீக வீடு விலைபோக அதை வாங்க முன் வருகிறார்கள் சோம்நாத்தின் பழைய பகையாளி சுந்தரேசன் (வினு சக்ரவர்த்தி) ,சோமநாதனின் பூர்விக வீட்டின் மேல் பரம்பரை பரம்பரையாக கண்ணாக  இருக்கும் இவர்கள் கையில் தன் சொத்து போவது சோமநாதன் மற்றும் அவர்கள் குடும்பத்திற்கு பிடிக்கவில்லை, இருந்த பொழுதும் தன் மகள்களின் எதிர்காலத்தை எண்ணி அதற்க்கு சம்மதித்து தன் வீட்டை விற்க முற்படுகின்றனர்.

மனதளவில் பலவீனம் அடைந்த சந்திரிகா தன் தங்கைகளுக்கு திருமணம் செய்து காட்டுவேன் ,இழந்த வீட்டை மீட்டெடுப்பேன் என்று சபதம் ஏற்கிறாள்.

சோமநாதன் தன் மகள்களை கரை சேர்த்தாரா? தான் இழந்த வீட்டை மீட்டெடுக்கிறாரா சந்திரிகா? என்ற எதிர்பார்ப்புகளோடு கதை பயணிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here