விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாளில் ‘குஷி’ படத்தின் பாடல் வெளியீடு! ரசிகர்கள் உற்சாகம்.

முன்னணி தெலுங்கு நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாள் இன்று. அதையொட்டி அவர் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘குஷி’ படத்திலிருந்து ‘என் ரோஜா நீயா..’ என தொடங்கும் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது.
அந்த பாடலின் மெட்டிற்கும், பாடல் வரிகளுக்கும் விஜய் மற்றும் சமந்தா திரையில் தோன்றி காதல் உணர்வை துல்லியமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதிய பாடல் வரிகளில் கதையின் நாயகனான விஜய், காதல் மீது கொண்ட பேரார்வத்தின் காரணமாக காதலை விவரிக்கிறார். காஷ்மீரின் பசுமையான நிலவியல் பின்னணியுடன் தொடங்கும் இந்த பாடலுக்கான காணொளியில் நடிகர் விஜய் பொருத்தமான காதலராகவும், சமந்தா அவருக்கு ஏற்ற அழகிய காதலியாகவும் தோன்றுகிறார்கள்.

ஹேஷாமின் இசையமைப்பும், அவரது சொந்தக் குரலும் பாடலின் ஜீவனுடன் பின்னிப் பிணைந்திருக்கின்றன.

இந்த பாடலுக்கு படத்தின் இயக்குநர் சிவா நிர்வாணா நடனம் அமைத்திருக்கிறார். சிவா நிர்வாணா மணிரத்னத்தின் ரசிகர் என்பதால், இந்த பாடலில் இடம்பெற்ற சில காட்சிகள், மணிரத்னம் படத்தின் அதிர்வை பிரதிபலிக்கின்றன.

விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் இந்த பாடல் வெளியாகியிருப்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிதி பங்களிப்புடன் தயாராகி இருக்கும் இந்த படம் செப்டம்பர் 1-ம் தேதியன்று வெளியாகிறது. இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா, ஜெயராம், சச்சின் கடேக்கர், முரளி சர்மா, லட்சுமி, ஆலி, ரோகிணி, வெண்ணலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி. முரளி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹேப் இசையமைத்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here