சதீஷ் ஜெயராமன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம் ‘கபடி ப்ரோ.’
இந்த படத்தின் கதை சின்னச் சின்ன தில்லு முல்லு செய்து வாழ்ந்து கொண்டிருக்கும் வரும் கபடி வீரன் வீரபாகு பற்றியது.
வீரபாகுவுக்கு பக்க பலமாக இருப்பவர்கள் அவனது நண்பர்கள் அர்ஜெண்ட் முத்துவும்,சக்தியும். அவர்கள் மூவரும் பாயும் புலி எனும் கபடி அணி வைத்து அந்த பகுதியின் சாம்பியன்களாக கெத்தாக வலம் வருகிறார்கள். இந்த நிலையில் வீரபாகுவும் அந்த ஊரின் காவல்துறை அதிகாரி இசக்கி பாண்டியனின் மகள் அபிராமியும் காதலில் விழுகிறார்கள்.
தன்னுடைய மாமா மகளை மணமுடிப்பான் என்று வீட்டில் எதிர்பார்த்த நிலையில் நண்பனின் பெயரில் ஆள்மாறாட்டம் செய்து அபிராமியை மணக்க முற்படுகிறான். அவனது பித்தலாட்டம் வெளியே தெரிய வர, இசக்கி பாண்டியனின் கோபத்துக்கு ஆளாகிறான். அபிராமியும் அவனை நம்ப மறுக்கிறாள். இசக்கி பாண்டியன் வீரபாகுவை தண்டிக்க கபடி போட்டியை தேர்ந்தெடுக்க, அதில் நேர்மையை வெல்ல உறுதி கொள்கிறான். பின்பு நடந்தது என்ன, போட்டியிலும் காதலிலும் வீரபாகு வென்றானா என்பதே ‘கபடி ப்ரோ’வின் கதை.
வீரன் வீரபாகுவாக சுஜன், அபிராமியாக பிரியா லால், அர்ஜெண்ட் முத்துவாக சிங்கம் புலி, சக்தியாக சஞ்சய் வெள்ளங்கி, இசக்கி பாண்டியனாக மதுசூதன் ராவ் ஆகியோர் நடிக்கும் இந்த படத்தில் மற்ற பாத்திரங்களில் ஹானா, மனோபாலா, சண்முக சுந்தரம், ரஜினி எம்,மீரா கிருஷ்ணன், அஞ்சலி, சிசர் மனோகர், சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.படக்குழு:-
தயாரிப்பு -அஞ்சனா சினிமாஸ் உஷா சதீஷ்
ஒளிப்பதிவு – இ. கிருஷ்ணமூர்த்தி
இசை – ஏ.ஜே. டேனியல்
பாடல்கள் – தாமரை, ஞானகரவேல்
நடனம் – நோபிள், ராதிகா
படத்தொகுப்பு – எஸ் பி அஹமத்
மக்கள் தொடர்பு – சிவகுமார்