சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட ‘கூழாங்கல்’ படத்தை இயக்கிய பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில், கதைநாயகனாக சூரி – விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட மலையாள நடிகை அன்னா பென் நடித்துள்ள படம் ‘கொட்டுக்காளி.’
சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ், தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது.
பொழுதுபோக்கு அம்சங்களுடன், பாராட்டுக்குரிய படங்களை தொடர்ச்சியாக தயாரித்துவரும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இந்த படத்தைத் தயாரிக்கிறது என அறிவிப்பு வெளியானதிலிருந்தே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்தது. ‘கூழாங்கல்’ இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜ் இந்த படத்தை இயக்குகிறார் என்பதும் எதிர்பார்ப்பை கூடுதலாக்கியது.
தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்ததையடுத்து பட வெளியீட்டுக்கு முந்தைய போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
படக்குழு குறித்த விவரம்:
ஒளிப்பதிவு – சக்தி –
படத்தொகுப்பு – கணேஷ் சிவா
ஒலி வடிவமைப்பாளர்கள் – சுரேன் ஜி, எஸ். அழகிய கூத்தன்