நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முதல் ரசிகர் கலைஞர் தான்! ‘பராசக்தி’ சிறப்பு திரையிடல் கனிமொழி கருணாநிதி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி.யின் முன்னெடுப்பில் தி.மு.க மகளிர் அணி சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள உட்லண்ட்ஸ் திரையரங்கில் இன்று (04/06/2023) கலைஞர் மு.கருணாநிதி வசனம் எழுதி, திரைக்கதையில் உருவாகி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த ‘பராசக்தி’ திரையிடப்பட்டது.

நிகழ்வில் கழக துணைப்பொதுச்செயலாளர் மக்கள் தலைவி கழகத்தின்போர்வாள் மாண்புமிகு அக்கா திருமிகு.கனிமொழிகருணாநிதி எம்.பி அவர்கள் தலைமை தாங்கி உரையாற்றினார்.

ரீ ரிலீஸ் செய்யப்பட்ட ‘பராசக்தி’ திரைப்படத்தை, திரைப்பட நடிகரும்,பராசக்தி திரைப்பட கதாநாயகன் மறைந்த சிவாஜி கணேசன் அவர்களின் மகனுமான திரு.பிரபு, தி.மு.கழக விளையாட்டு மேம்பாட்டு அணிச் செயலாளர் தயாநிதி மாறன் எம்.பி ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

இந்த நிகழ்வில்,கழக தலைமை நிலைய செயலாளர்,வீட்டுவசதிவாரியத்தலைவர் அன்பு அண்ணன் திரு.பூச்சி S முருகன் அவர்கள், சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் நே.சிற்றரசு M.C, திமுக மகளிர் அணிச் செயலாளர் ஹெலன் டேவிட்சன், திமுக மகளிர் அணிச் தலைவர் விஜயா தாயன்பன், திமுக மகளிர் தொண்டர் அணிச் செயலாளர் நாமக்கல் ராணி, திமுக மகளிர் மாநில/மாவட்ட நிர்வாகிகள், உட்லண்ட்ஸ் திரையரங்க உரிமையாளர்கள், திமுக மகளிர் அணியைச் சார்ந்த தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் கனிமொழி எம்.பி, ‘‘தமிழ் திரையுலகம் கடந்து சென்றுவிட முடியாத ஒரு மைல்ஸ்டோன் திரைப்படம் பராசக்தி. சமூகத்தை விமர்சனத்தால்.சாடிய பராசக்தி திரைப்படத்தை வெளியிடுவதில் பல்வேறு சிக்கல்கள் இருந்தது.ஆனால் திரைப்படத்தைப் பார்த்த பின் எல்லாரும் கை தட்டி வரவேற்றார்கள். பிடிக்காதவர்கள் கூட படத்தை கைதட்டி ரசித்து, விமர்சித்த அளவுக்கு வரவேற்பை பெற்றது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முதல் ரசிகர் கருணாநிதி என்று சொல்லலாம்.எப்படி நடிக்கிறான் பாரு எனப் படம் ஓடிக்கொண்டிருக்கும்போது எழுந்து சென்று தொலைக்காட்சியில் முத்தம் கொடுப்பார் கலைஞர். அம்மா கூட கிண்டலடிப்பார்கள். ஆனாலும், அவரால் கட்டுப்படுத்த முடியாது. நாயகனுக்குப் பகுத்தறிவு சொல்லிக் கொடுத்து, நாயகனுக்கு வழிகாட்டிய படமாகப் பராசக்தி திரைப்படம் அமைந்தது.இப்போது வரை தமிழ் சினிமா ஹீரோயின்கள் பைத்தியக்காரத்தனமாக கேள்விகள் கேட்பது போல தான் கதாபாத்திரங்கள் உள்ளன. ஆனால், அன்றே கதாநாயகியைச் சிந்திக்கத் தெரிந்த, சமூகக் கருத்துகள் பேசும் கதாநாயகியாக உருவாக்கியிருந்தார் கலைஞர்.

உத்திரபிரதேச வழக்கில் பஞ்சாயத்து செய்ய நீதிமன்றத்திற்கு உரிமை கிடையாது. முதலில் பாலியல் வன்முறை குற்றவாளிக்கு நீதிமன்றம் தண்டனை கொடுக்க வேண்டும். குற்றத்திற்கு தண்டனை தராமல் இருப்பதற்கு நீதிமன்றத்திற்கு யார் உரிமை கொடுத்தது. கலாசாரத்தை பாதுகாக்கிறோம் என்று சொல்லி ஒன்றிய அரசு பெண்களை அவமானப்படுத்துகிறார்கள்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here