கலைஞர் தொலைக்காட்சியில் ஜூன் மாதத்தை கொண்டாடும் விதமாக இந்த மாதம் முழுவதும் ஒவ்வொரு ஞாயிறும் புத்தம் புதிய சூப்பர்ஹிட் திரைப்படங்கள் ஒளிபரப்பாக இருக்கிறது. அதன்படி சூர்யா நடிப்பில் ‘ஜெய் பீம்’, மாதவன் நடிப்பில் ‘ராக்கெட்ரி’, சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டான்’, பார்த்திபன் நடிப்பில் ‘இரவின் நிழல்’ உள்ளிட்ட புத்தம் புதிய பிளாக்ஃபஸ்டர் திரைப்படங்கள் ஒளிபரப்பாக இருக்கிறது.இதில், மாதவன் இயக்கி நடித்த ‘ராக்கெட்ரி’ வருகிற ஜூன் 11-ம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில், தேச துரோகியாக முத்திரை குத்தப்படும் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு இழைக்கப்படும் அநீதி மற்றும் அவர் சந்திக்கும் இன்னல்களை அப்பட்டமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
இதில், தாய்நாட்டிற்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த விஞ்ஞானி நம்பி நாராயணனாக மாதவனும், அவரது மனைவியாக சிம்ரனும், மற்றும் பல்வேறு முக்கிய கதாபாத்திரங்களில் ரவி ராகவேந்திரா, ரஜித் கபூர், மிஷா கோஷல், கார்த்திக் குமார், மோகன் ராமன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
சிரிஷா ராய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார்.